அரசியல் வாதிகளையோ அல்லது செல்வாக்குடைய பிறரையோ 'அவர் மிக சிறந்த ஆளுமை' 'ஆளுமை மிக்கவர்' என்றெல்லாம் சொல்கிறார்கள். மற்றவர்களையும் 'ஆளுமை மிக்கவராக மாறுங்கள்' , 'ஆளுமையை வளர்த்துக் கொள்ளுங்கள்' என்றெல்லாம் ஊக்கப்படுத்துகிறார்கள்.
இவர்கள் எதை ஆளுமை என்று நினைத்து அவ்வார்த்தையை பயன்படுத்துகிறார்கள் என்று நான் நினைக்கிறேன் என்றால். பேச்சாற்றலுடன், நடை, உடை, பாவனை எல்லாம் - எதை இவர்கள் கீழானது, கோழைத்தனமானது, வலுவற்றது, அசிங்கமானது, நாகரீகமற்றது, கௌரவமற்றது என்று கருதுகிறீர்களா அப்படி இல்லாமல் - பார்ப்பதற்கு கம்பீரமாக, தைரியமாக, அறிவாற்றல் நிரம்பியவர்போல, நாகரீகமானவர் போல தோற்றமளிக்கக்கூடிய வகையில் இருக்கும்படி தன்னை மாற்றிக்கொள்வது.
வெளித்தோற்றத்தையும், பேச்சாற்றலை மட்டுமே இது பிரதானமாக கொண்டுள்ளது. எல்லோரும் அப்படி இருக்கவே முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். வயது கூட கூட இதுபோன்ற வெளித்தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னை மாற்றிக்கொள்கிறார்கள். அலுவலகத்தில் ஒருவிதமான வெளித்தோற்றத்துடனும், வீட்டில் ஒருவிதமாகவும், நண்பர்களுடன் ஒருவிதமாகவும், மற்றவர்களுடன் ஒருவிதமாகவும் என்று மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள் ஒரு முகமூடியைப்போல அதனால்தான் personality என்ற வாதையே முகமூடி என்கிற லத்தின் சொல்லிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
இது தனிமனிதன் தன்னைத்தானே மேம்படுத்திக்கொள்வதைத்தான் குறிக்கிறது என்று சொல்லிக்கொண்டாள் கூட; அது மேம்படுத்துவது என்பதை விட பட்டி டிங்கரிங் செய்வது என்றுதான் நான் கருதுகிறேன்.
ஒவ்வொரு மனிதனும் தன் இயல்பின்படி வளருவதில்லை, பிறந்ததிலிருந்து அவன் ஒரு கணினியைப்போல தன்னை சுற்றியுள்ள மனிதர்களாலும், சுற்றுப்புறத்தாலும் program செய்யப்படுகிறான். அவனே ஒரு போலியான பிம்பமாக உருவாகியுள்ளபோது. அவன் கற்றுவைத்துள்ள நடை உடை பாவனை, பேச்சு, அறிவு என்று எல்லாமுமே வெறும் வெளிப்பூச்சாக மட்டுமே இருக்கும்.
ஒருநாடிகன் தெரிந்தே ஒரு கதாபாத்திரத்தைப்போல மாறி நடிப்பதைப்போல நாம்மில் பலர் தெரிந்தோ தெரியாமலோ எப்படி இருக்கவேண்டும் என்று இவ்வுலகம் கட்டமைத்து வைத்துள்ளோ அப்படி மாற்றிக்கொள்ள முயற்சித்துக்கொண்டிருக்கிறோம்.
ஒரு செலிபிரிட்டி ஆகிவிட்டால் எப்படி நடந்துகொள்வது, தொழிலதிபர், போலீஸ், கவிஞர், ஓவியர், எழுத்தாளர், ஆசிரியர், அரசியல்வாதி, இன்னும் பல இப்படி ஒவ்வொருவிதமாக தங்களை project செய்து கொள்கிறார்கள். அதற்கேற்ற நடை உடை பாவனை பேச்சுக்களை மாற்றிக்கொள்கிறார்கள். ஒருவேளை தங்கள் துறைக்கேற்றபடி வெளித்தோற்றத்தை கொண்டிருக்கவில்லையென்றால் அவரின் நிலை என்னவாக இருக்கும்!!? தெரிந்தோ தெரியாமலோ நாமெல்லோரும் நடிகர்களே. இதில் சிறந்த நடிகர்கள் தன் கதாபாத்திரத்தில் ஊறி கதாபாத்திரமாகவே மாறியவர்கள் அனைவராலும் போற்றப்படுகிறார்கள். நம் வெளிப்பூச்சுக்களான இந்த pesonaality ஐ தாண்டி உள்ளே சென்று பார்த்தல் வெங்காயத்தை உரித்த கதைதான்.
சரி நாம் தமிழ் சொல்லான 'ஆளுமை'க்கு வருவோம். ஆளுமை என்ற வார்த்தையே என்னை பொறுத்தவரை வன்முறையானது. ஒன்றை கட்டுப்படுத்தி ஆட்டிப்படைப்பதுதான் அதன் அர்த்தம். அதாவது அதிகாரம் செலுத்துதல், ஆளுதல் என்று பொருள்படும். இது சுதந்திரத்துக்கு எதிரானது இல்லையா!
இன்றைய சூழலில் இந்த ஆளுமை எனும் கருத்தாக்கம் தான் எங்கும் ஊடுருவியுள்ளது. சுதந்திரம், சமத்துவம் பேசும் இடங்களில்கூட இது கால்பதித்துள்ளது.
உதாரணம் சொல்லவேண்டும் என்றால், ஆசிரியர் - மாணவர், பெற்றோர் - பிள்ளைகள், கட்சி தலைவர் - உறுப்பினர், தலைவன் - தொண்டன், செல்வந்த நாடு - ஏழை நாடு, மனிதன் - விலங்கு இன்னும் பல
ஒருவன் எவ்வளவு பேரை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து - அடக்குமுறையிலோ, அன்பிலோ, அறியாமையிலோ - தான் சொல்படி கேட்டு நடக்கும் படி செய்ய வைக்கிறானோ அவன் அவ்வளவுக்கு அவ்வளவு சிறந்த ஆளுமையாக பார்க்கப்படுகிடுறான்.
அப்படியெல்ல்லாம் இல்லை, தன்னை கட்டுப்படுத்தி, தன்னை செதுக்கிக்கொள்வதுதான் ஆளுமை என்று நினைக்கிறீர்களா! இயற்கையா ஒரு பூ மலர்வதற்கும், வற்புறுத்தி மலர செய்வதற்கும் வேறுபாடு இருக்கிறதல்லவா!
தன்னை கட்டுப்படுத்தி, வற்புறுத்தி ஒன்றை செய்வதும் வன்முறையானதுதானே! போலியானதுதானே!
(மேலோட்டமாக பார்க்கும்போது இது மிகைப்படுத்தலாகவோ அல்லது முட்டாள்தனமாகவோ தோன்றுகிறதல்லவா! எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது என்றாலும் இதை ஆழ்ந்து சிந்திக்கும்போது இதில் உண்மை இருப்பதாகவே தோன்றுகிறது!)
- தீயவன்

No comments:
Post a Comment