யூ டாஃபு (Yu Dafu) எழுதிய ‘இரத்தமும் கண்ணீரும்’ (Blood and Tears) எனும் இச்சிறுகதை, வெளிநாட்டில் கல்வி பயின்று திரும்பிய ஒரு இளைஞன், எதார்த்த வாழ்வில் சந்திக்கும் அவலங்களையும், சித்தாந்தங்களுக்கும் எதார்த்தத்திற்கும் இடையே உள்ள முரண்களையும் பற்றியது.
கதையின் தொடக்கமே, வெளிநாட்டில் படித்துவிட்டுத் திரும்பிய இளைஞன் சந்திக்கும் இளம் மாணவர்கள் எல்லோரும் "நீங்கள் எந்தக் கொள்கையை ஆதரிக்கிறீர்கள்?" "கம்யூனிசம் பற்றி உங்கள் கருத்து என்ன?" என்றெல்லாம் கேட்பதாக இருக்கும்.
அதாவது, Socialism, Communism, Cosmopolitanism, Humanitarianism போன்ற பல பல (Ism) கொள்கைகளில் ஏதாவதொன்றை ஆதரித்து அதுகுறித்து பேசுவது - எழுதுவதே ஒரு சமூக அந்தஸ்தை தரக்கூடியதாகவும், எந்த கொள்கையும் அற்று இருப்பது அவமானகரமானதாகவும் கருதும் ஒரு சூழல் உண்டாகிருப்பதையும்; 'கலை மக்களுக்கானது' (art for life's sake) என்றும் எளிய மக்களின் துயரத்தை இரத்தமும் சதையுமாக கலையில் வெளிப்படுத்தவேண்டும் என்று பரவியிருந்த கதையாடல்களையும், சித்தாந்த போலித்தனத்தையும் இக்கதை மிக அற்புதமாகக் கட்டுடைப்பு (Deconstruction) செய்கிறது.
இக்கதையை படித்துமுடிக்கும்போது இது ஒரு 'பின்நவீனத்துவ கேலி'யோ என்றுகூட நினைக்கத்தோன்றும்.
Sinking குறுநாவலின் கதாநாயகன் விரக்தியின் உச்சத்தில் தற்கொலை செய்துகொள்வான். ஆனால், இக்கதையின் நாயகனோ இருத்தலியல் நெருக்கடிகள் புரட்டியெடுத்தபோதிலும் ஒரு Absurdist போல தென்படுகிறான்.
புத்தகத்தை படிக்க (E-book | Amazon KDP) : https://amzn.in/d/0arDzGZF
- தீயவன்

No comments:
Post a Comment