Breaking

Tuesday, April 21, 2020

வாழ்க்கை வலியின் வரிகள்

சமுதாயத்தால் கிழிக்கப்பட்ட என் இதயத்தை தனிமைகொண்டு தைக்கிறேன். - தீயவன்


காயம்கொண்ட இதயம் ஊமையாகிவிடுகிறது, அதை மீண்டும் காயப்படுத்தினாலும் அதன் அழுகை வெளியே கேட்பதில்லை. - தீயவன்


குப்பையைக்கூட நம்பியிரு மனிதனைநம்பி இருந்துவிடாதே
- தீயவன்


சாதலும் மேலாம் குறைசொல்ல கேட்டு வாழ்தலைவிட, வீழ்தலும் மேலாம் போட்டியிட்டு பிழைத்தலைவிட. - தீயவன்


சோதனை நிறைந்த வாழ்வினில் சாதனைக்கிடமேது சாதனைதான் தேவையெனில் மிஞ்சுவது வேதனையே. - தீயவன்


இறைவா! ஏனிந்த உடலில் என்னுயிரை புகுத்திவிட்டாய் உன்னை பழித்ததற்கா என்னை சபித்துவிட்டாய்? - தீயவன்



பல தனிமனித சுயத்தை - தனித்தன்மையை  கொன்றுகுவித்த சர்வாதிகாரியே சமுதாயம்.  - தீயவன்



சமுதாயம், மற்றவர்போல் இருக்கவே கற்றுத்தருகிறது தனித்துவமாய் இருந்துவிட்டால் நகைபுரியப்பார்க்கிறது.  - தீயவன்









No comments:

Post a Comment