சீன நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான யூ டாஃபு (Yu Dafu) அவர்களால் 1923-இல் எழுதப்பட்ட மிகச்சிறந்த குறுநாவல் "பித்தேற்றும் வசந்தகால இரவுகள்" (Intoxicating Spring Nights), இது ஒரு வேலையற்ற பட்டதாரி இளைஞனுக்கும், ஒரு இளம்பெண்ணுக்கும் இடையே மலரும் மென்மையான பிணைப்பை - மனிதாபிமானம் மிக்க உறவை - இக்கதை அழகாகச் சொல்கிறது.
இந்தக் கதை ஷாங்காய் நகரத்தின் ஒரு குறுகலான சேரிப் பகுதியில் நடைபெறுகிறது. கதையின் நாயகன் ஒரு படித்த வாலிபன் ஆனால் சமூகச் சூழலால் வேலையற்று, வறுமையின் பிடியில் சிக்கி, ஒரு சிறிய அறையில் அடைந்து கிடக்கிறான். அவன் ஒரு சிறுகதை எழுத்தாளன் மற்றும் கவிஞனும் கூட. தன் கதைகளையும் மொழிபெயர்ப்பு கவிதைகளையும் கட்டுரைகளையும் பத்திரிகைகளுக்கு அனுப்பிக்கொண்டிருப்பான் அதன்மூலம் குறைந்தபட்ச பணம் கிடைக்கும் என்பதால். பகலில் தூங்கிவிட்டு, இரவில் யாருக்கும் தெரியாமல் நீண்ட தூரம் நடப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவன். அவனுடைய பக்கத்து அறையில் 'சென் எர்மெய்' என்ற இளம்பெண் வசிக்கிறாள். அவள் ஒரு சிகரெட் தொழிற்சாலையில் கடுமையாக உழைத்து மிகக் குறைந்த ஊதியம் பெறுபவள். வறுமையிலும், கடும் உழைப்பிலும் சிக்கியிருந்தாலும், நேர்மையான குணமும் பிறர் மீது அக்கறையும் கொண்டவள்.
வசந்த காலத்தின் தென்றல் வீசும் அந்த இரவில், பெரிய நகரங்களின் ஆடம்பரங்களுக்குப் பின்னால் மறைந்து கிடக்கும் ஏழைகளின் துயரத்தையும், சமூகத்தால் கைவிடப்பட்டவர்களின் தனிமையையும் இக்கதை ஆழமாகப் பதிவு செய்கிறது.
Amazon KDP: https://amzn.in/d/0cC4Kr1r
- தீயவன்

No comments:
Post a Comment