இந்த உலகில் நாம் கற்றுக்கொண்ட பாடத்தை விட வறுமை, அவமானம், புரக்கணிப்பு இவைகள் கற்றுத்தந்த பாடமே அதிகம். - தீயவன்
பணம் இருக்கும்போது மட்டுமே கிடைக்கும் உறவு, பாசம்,மதிப்பு, மரியாதை அனைத்தும் முற்றிலும் போலியானது. இந்த உண்மையை பணமும் வேலையும் இல்லாதபோது உணர்ந்துக் கொள்வாய். - தீயவன்
வறுமையில் கைகொடுத்து உதவுவாரில்லை வந்தவர் போனவர் அறிவுரைக்கோ பஞ்சமில்லை. - தீயவன்
சொந்தவீடாகினும் சொந்த உழைப்பில் சாப்பிடாவிட்டால் சாப்பிடும் சாப்பாடும் குற்ற உணர்வை ஏற்ப்படுத்தும். - தீயவன்
எதிர்பார்ப்பில்லாமல் யாரும் எதையும் செய்யமாட்டார்கள். தானம், தர்மம் செய்வது கூட ஏதோ ஒன்றை எதிர்பார்த்துத்தான். - தீயவன்
மகிழ்ச்சி
ReplyDelete