பாதையில் விழுந்த சருகாய்
கிழிந்துபோனேன் மிதிபட்டு
- தீயவன் -
24.06.2021
மலர்கூட ஒருமுறைதான் வாடும்
மனமோ பலமுறை வாடியும் ஏனோ மரிப்பதில்லை
- தீயவன் -
09.07.2020
கானல் என்று தெரிந்துதான் கால் நோக நடக்கிறேன்
- தீயவன் -
18.03.2021
என் துயர் ஆற்ற!
- தீயவன் -
28.12.2021
என்னுடைய இருத்தல்
இறத்தலை விட துன்பமானது
24.05.2021
- தீயவன் -
சடங்காகிப்போன கொண்டாட்டங்களெல்லாம்
சலிப்பை மட்டுமே தருகிறது
- தீயவன் -
24.12.2021
உடமைகளில் பற்றில்லை
உறவுகளில் நம்பிக்கையில்லை
வாழ்க்கையில் நோக்கமில்லை
வாழ்கிறேன் ஓர் வாழ்க்கை
- தீயவன் -
இசையும் இரைச்சலாகிவிடுகிறது சில நேரங்களில்
- தீயவன் -
14.07.2022
தனிமையை தவிர்க்க மனிதனிடம் ஓடினேன் அன்று
மனிதனிடமிருந்து தப்பிக்க தனிமையை தேடி ஓடுகிறேன் இன்று
- தீயவன் -
27.06.2021
எனக்கு நம்பிக்கையில் நம்பிக்கையில்லாமலில்லை
சில மனிதர்களை நம்புவதில் தான் நம்பிக்கை இல்லை
- தீயவன் -
10.10.2021
மொழிபெயர்க்க முடியா சிந்தனை சீற்றத்தில்
சிக்கி சிதைகிறேன் தனிமையில் அமர்ந்தவாறே...
- தீயவன் -
05.01.2022
மரணத்தின் மடியில் கண்ணுறங்க காத்திருக்கிறேன்
- தீயவன் -
29.04.2021
உலகம் என்னவோ சுழன்றுகொண்டுதான் இருக்கிறது
என் கடிகார முட்கள்தான் இன்னும் நகரவில்லை
- தீயவன் -
2021
வறண்ட இதயம் கண்ணீர் சிந்துவதில்லை
- தீயவன் -
23.01.2021
நம்மேல் சொல் அம்பு எய்திட தனிமை என்ன மனிதனா!
- தீயவன் -
2020
No comments:
Post a Comment