Breaking

Monday, May 4, 2020

மன்சூர் அல் - ஹலாஜ் | இரண்டாம் இயேசு



மன்சூர் அல் - ஹல்லாஜ்'ஐ நான் இரண்டாம் இயேசுவாக பார்க்கிறேன். ஏனெனில் இவ்விருவரின் வாழ்க்கையும் ஒன்று போலவே இருந்துள்ளது. இவர்கள் கொடூரமாக கொல்லப்படுவதற்க்கு இவர்களின் நம்பிக்கையும், போதனைகளுமே காரணமாக அமைந்துள்ளது அவற்றை பற்றி சுருக்கமாக பின்வருமாறு :

மன்சூர் அல் - ஹலாஜ் பெர்சியாவில் பிறந்து ஈராக்கில் வாழ்ந்துவந்த ஒரு சூஃபி ஞானி. கிறிஸ்துவிற்கு பிறகு ஏறத்தாழ 800 ஆண்டுகள் கழித்து பிறந்தவர். தன் சிறு வயதிலேயே குர்ஆன் 'ஐ முழுதும் படித்து முடித்தவர். இருந்தும் அவரது ஆன்ம தாகத்தை குர்ஆன் தீர்க்கவில்லை.

இஸ்லாமியர்களின் தலையாய கடமைகளுள் ஒன்று தன் வாழ்நாளில் ஒருமுறையாவது காபா (Kaaba) செல்வது. இவரோ காஃபாவிற்க்கு செல்ல முடியாத ஏழ்மையில் இருந்தர். இருந்தும் 2 , 3 முறை காபாவிற்கு சென்றுள்ளார். காபாவிற்கு சென்று அங்கேயே ஒரு ஆண்டு தனிமையிலும் மௌனத்திலும் இருந்திருக்கிறார்.  தன் ஆன்மீக தேடல் காரணமாக அவர் இந்தியா, சீனா உட்பட பல நாடுகளுக்கும் சென்றுள்ளார்.

பிறகு ஒருநாள் தன் குருவிடம் (ஜூன்னைத்)  தனது ஆன்மீக கேள்விகளையும் அனுபவத்தையும் பற்றி பேசினார், இவற்றை நீ வெளிப்படையாக பேசினால் நீ கொல்லப்படுவது நிச்சயம் என்று குரு எச்சரிக்கைசெய்திருக்கிறார். அதற்கு ஹல்லாஜ் - அப்படி நடக்கும்போது உங்கள் சூபி ஆடையை கழற்றிவிட்டு மதத்தலைவர்கள் ஆடையை அணியுங்கள் என்றார். கடைசியில் அப்படியே ஆனது.

அப்படியென்ன ஆபத்து விளைவிக்கக்கூடிய ஞான அனுபவம் அது?.



அனா அல்-ஹக் - I AM THE TRUTH - நானே உண்மை - இறைவன்.

ஆம், இவர் தன்னையே கடவுள் என்றார், ஏசுவும் இவ்வாறே சொல்லிக்கொண்டார் " நானே வழியும், உண்மையும், வாழ்வுமாயிருக்கிறேன். என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரமுடியாது"

இறைவன் அனைவருக்குள்ளும் இருக்கிறான் என்றும் அல் ஹல்லாஜ் சொல்கிறார். அவரின் சில சர்சைக்குரிய கருத்துகள் 👇

"இறைவனை உங்கள் உள்ளத்தில் தேடுங்கள்."

"உங்கள் இதயத்தில் உள்ள காபாவை சுற்றுங்கள், வெளியே உள்ள புனித தளங்களை சுற்றவேண்டாம்."

"முஸ்லிம்களுக்கு அது பாவமாக இருந்தாலும் நான் வழிபாட்டை மறுக்கிறேன்."

"நானே உண்மை (இறைவன்)."

"நான் உண்மையால் (இறைவனால்) மூடபட்டுள்ளேன்."


இப்படிப்பட்ட இவரது ஆன்மீக கருத்துகள் இஸ்லாத்திற்கு/குரானுக்கு எதிராக இருந்தது. முகமதியர்களால் இவரது ஞானத்தை புரிந்துகொள்ள முடியவில்லை, பித்தராகிவிட்டார் என்றே நினைத்தார்கள். இவரின் இந்த நடவடிக்கை சமுதாயத்திலும், மதத்திலும், அரசியலிலும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதனால் பல ஆண்டுகள் சிறைவாசமும் அனுபவித்துள்ளார்.
மதத்தலைவர்களின் குற்றசாட்டினால் மரணதண்டனையும் விதிக்கப்பட்டது. எப்படி இயேசு மரபு மத தலைவர்களால் குற்றம்சாட்டப்பட்டு சிலுவையில் அறையப்பட்டாரோ அப்படியே.

ஒருமுறை, அல் ஹல்லாஜ் 'ஐ மக்கள் கற்களால் அடிக்கும்போது அவர் சிரித்துக்கொண்டிருந்தார் ஆனால் யாரோஒருவர் தன் மீது ரோஜா பூவை வீசியதும் அழத்தொடங்கிவிட்டார். ஏன் என்று கேட்டதற்கு " கற்களை வீசுபவர்கள் அறியாமையால் செய்கிறார்கள், எனவே அவர்கள் மன்னிக்கப்படவேண்டியவர்கள். ஆனால் ரோஜா பூ வீசியவன் தெரிந்தே வீசியுள்ளான் இது என்னை காயப்படுத்துகிறது" என்றார். இது இயேசு சிலுவையில் இருக்கும்போது கூறிய அந்த வார்த்தையை நினைவுபடுத்துகிறது : "பிதாவே இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" என்பது.

மரண தண்டனை தீர்ப்பை நிறைவேற்றுவதற்க்கு ஹல்லாஜ் 'ஐ இயேசுவைபோல் சங்கலிகளால் கட்டப்பட்டு பலியிடும் இடத்திற்கு கொண்டுவரப்பட்டார்.   Anal-Haq , நானே உண்மை என்று மகிழ்ச்சியுடன் சொல்லிச்சிண்டு, தான் பலியிடும் இடத்தை முத்தமிட்டார். இந்த மகிழிச்சிக்கு காரணமென்ன என்று கேட்டபோது " நான் வீடு திரும்பபோவதற்கான மகிழிச்சி இது" என்றார். மேலும் அவர் சொன்னார் : "நன்னெறிகளை பின்பற்றுவதன்மூலம் கடவுளை அடையமுடியும் என்று இந்த முழு உலகமும் நம்பிக்கொண்டிருக்கிறது, அதற்கு பதிலாக இறைத்தன்மையை தேடுங்கள்" என்று. பின் அவரை துண்டு துண்டாக வெட்டபட்படுவதற்காக கைகால்கள் மரத்தில் கட்டப்பட்டது (சிலுவையில் அறையபட்டத்தை போன்று) அவரது கால்களை வெட்டியபோது சொன்னார் " இந்த கால்களாலே இந்த பூமியில் நான் பயணித்தேன், ஆனால் என்னிடம் வேறொரு கால் உள்ளது அதன் மூலம் இரண்டு உலகிலும் பயணிக்கமுடியும்". பிறகு அவரது கைகள் வெட்டப்பட்டதும் அதிலிருந்து பீறிட்ட குருதியை தன் முகத்தில் சிந்தும்படி செய்தார், என் இப்படி செய்கிறாய் என்று கேட்டபோது " நான் அதிக ரத்தத்தை இழந்துவிட்டேன், என் முகம் வெளிர்ந்து விட்டது, வாடிய முகமாக காட்சியளித்துவிட கூடாது" என்பதற்காக என்றார்.  பிறகு கண், மூக்கு, காதுகளையும் வெட்டினார்கள்.

இயேசு கூட சிலுவையில் சோகத்துடன் இருந்தார் ஆனால் அல் ஹலாஜ் 'ஒ  சிரித்துக்கொண்டு சொன்னார் "நீங்கள் என் உடலைதான் துன்புறுத்துகிறீர்கள், என்னையல்ல". இது இயேசுவின் வார்த்தையான " என்னை சிலுவையில் அறைந்தாலும், நான் உயிர்த்தெழுவேன் " என்பதுடன் ஒத்துப்போகிறது.  பிறகு அவரது நாக்கை அறுக்க முயன்றபோது " ஓ இறைவா எனது கடைசி வார்த்தையை அனுமதி, நீ என்னை உறுதியாகவும் உண்மையாகவும் வைத்ததற்கு நன்றி, என்னை துன்புறுத்துவர்களையும் நீ ஆசீர்வதிக்கவேண்டும்"  என்றும் பின் "அவனுடைய அன்பு உங்களை மற்றவர்களிடமிருந்து பிரிக்கிறது" என்று கடைசியாக கூறினார் பின் அவர் நாக்கு வெட்டப்பட்டது .
பிறகு மாலை தொழுகை நேரத்தில் அவர் தலை வெட்டப்பட்டது. அடுத்தநாள் அவர் உடல் பாகங்கள் எரிக்கப்பட்டு அதற்கு அடுத்தநாள் நீரிலும் காற்றிலும் அந்த சாம்பல் கரைக்கப்பட்டது.

இவருக்கு பின் பிறந்த சூபி ஞானி  ஜலாலுதீன் ரூமி இவரது மரணத்தைப்பற்றி கூறியதாவது: "கொடுங்கோலர்களின் கையில் பேனா இருந்ததால் அவர் கொல்லப்பட்டார்." மேலும் அல் ஹாலாஜ் 'இன் கருத்துக்களை ஆதரித்தும் சில கவிதைகளை ரூமி எழுதியிருக்கிறார். ஓஷோ வும் அல் ஹாலாஜ் பற்றி கூறியிருக்கிறார். நான் இப்பதிவை எழுதுவதற்க்கும் ஓஷோவே காரணம்.

மன்சூர் அல் ஹாலாஜ் கவிதைகளை படிக்க: https://ennaththinkural.blogspot.com/2020/05/blog-post.html


- தீயவன்


No comments:

Post a Comment