Breaking

Friday, May 1, 2020

Antisocial Quotes in Tamil | Evilboy

சமத்துவமின்மையால் மட்டுமே இயங்கக்கூடிய ஒரு சமுதாய கட்டமைப்பில் இருந்துகொண்டே சமத்துவத்தை எதிர்பாக்கிறார்கள் இந்த விசித்திர மனிதர்கள். - தீயவன்


சமுதாயம் என்பது ஒருவரையொருவர் சுரண்டி வாழ்வது உடமைகளை மட்டுமல்ல உணர்வுகளையும் கூட. - தீயவன்

வஞ்சகர்களுக்கு மட்டுமே சமுதாயம் பயனுடையதாயிருக்கும் ஏனெனில் அவர்களுக்கான ஆகாரம் அங்கிருந்தே அறுவடைசெய்யப்படுகிறது. - தீயவன்

சமுதாய கட்டமைப்பில் சிக்கி மனிதன் தன் சுயத்தை இழந்துவிட்டான். - தீயவன்

மதியீனர்களை மட்டுமே உருவாக்குவதன்மூலம் உங்கள் சமுதாயம் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. - தீயவன்

தேவகுமாரர்கள் இந்த சமுதாயத்திற்கு வழிபட மட்டுமே தேவைப்படுகிறார்கள். மாறாக சமுதாயத்தின் குருட்டுத்தனத்தையும், ஊனத்தையும் குணப்படுத்த முயன்றால் சிலுவையில் அறையப்பட்டுவிடுகிறார்கள். - தீயவன்

ஒருவேளை உணவிற்க்காக இந்த மனிதர்கள் தங்கள் ஆன்மாவை விற்று சமுதாயம் எனும் சிறைச்சாலையில் வாழ்நாள் முழுவதும் அடிமைவேலை செய்து பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள். - தீயவன்


பொதுநலம் என்ற பெயரில் சுயநலமாய் மட்டுமே இயங்கிவருகிறது உங்கள் சமுதாயம். - தீயவன்

தனிமைக்கு அஞ்சும் ஒரு சமூகம் உண்மையில் மனநலமிக்கதாக, ஆரோகியமானதாக இருக்கமுடியுமா. - தீயவன்


சகமனிதனின் உளவியலை புரிந்துகொள்ளமுடியாத ஊனமுற்ற சமுதாயம் வேதங்களை படித்துவிட்டு இறைவனையே அறிந்து கொண்டதாய் எண்ணிக்கொண்டிருக்கிறது. - தீயவன்








No comments:

Post a Comment