சூபி ஞானி மன்சூர் அல் - ஹல்லாஜ் 'இன் கவிதைகள் தமிழில்
❤ காதல் கடலில் நீந்துவதை நான் நிறுத்துவதில்லை
அலையுடன் உயர்ந்து பிறகு தாழ்கிறேன்
இப்போது அலை என்னை தாங்குகிறது
பின் அதில் நான் மூழ்கிவிடுகிறேன்
காதல் என்னை தாங்கிச்செல்கிறது
எந்த கரையும் இல்லாத இடத்திற்கு
❤ உண்மையை நாடினேன், மதத்தை படித்தேன்
பல கிளைகளிலும் வேர் ஒன்றே என்று அறிந்தேன்..
மதநம்பிக்கையில் விழாமல் இருந்தது நலம்
ஏனெனில் அதன் பல அங்கத்தில் காணாமல் போயிருப்பேன்..
ஒருமித்த வேரை கண்டுபிடிப்பதே மேன்மை,
அந்த ஒற்றை பரம்பொருள்
விடியல் வெளிச்சம் போல் உள்ளது. (Tamil Translation : Yahqappu Adaikkalam)
விடியல் வெளிச்சம் போல் உள்ளது. (Tamil Translation : Yahqappu Adaikkalam)
❤ உன் நிமித்தம், நிலத்தின் மீதும் சமுத்திரத்தின் மீதும் விரைகிறேன்
உன் நிமித்தம், பாலைவனத்தை கடந்து மலையை இரண்டாக பிளக்கிறேன்
அனைத்திலும் என் முகத்தை திருப்பினேன்
நான் உன்னுடன் தனித்திருக்கும் அவ்விடத்தை
அடையும் நாள் வரையிலும்.
❤ என் இறைவனை கண்டேன், இதயக் கண்ணால்
நீ யாரென்று கேட்டேன், நீதான் என்றது
எங்கும் இருக்கிறாய், ஆனால்
நீ இருக்கும் இடமோ இடத்திற்கு தெரிவதில்லை
எங்கு இருக்கிறாய்?
நிர்வாணமாக்கப்பட்டு என் நிர்மூலத்தில்
நீயே நானாக
❤ நான் யாரை நேசிக்கிறேனோ அவனே நான்,
என்னால் நேசிக்கப்படுகிறவன் நானே
ஓருடல் ஈருயிராய் உள்ளோம்
நீ என்னை பார்க்கும்போது அவனை காண்கிறாய்
அவனை பார்க்கும்போது எங்கள் இருவரையும் காண்கிறாய்
❤ ஒயின், நீரில் கலந்திருப்பதுபோல
உனது ஆவி என்னுள் கலந்துள்ளது
உன்னை தொடுவதெல்லாம் என்னையும் தொடுகிறது
இதோ, ஒவ்வொரு நிலையிலும் 'நீ நானே'!
❤ நீ விலகிச்சென்றாய் ஆனாலும் என்னுள் நிலைத்திருக்கிறாய்
அது எனது அமைதியும் மகிழ்ச்சையுமாக ஆனது
பிரிவிலும், பிரிவு எனை விலகிச்சென்றது
இனம்புரியாத ஒன்றை கண்டேன்
என் ஏக்கத்தின் அந்த மறை ரகசியம் நீதான்
கனவைவிட மிக ஆழமாக என் உள்ளத்தில் மறைந்துள்ளாய்
பகலிலோ நீ எனக்கு உண்மையுள்ள நண்பன்
இருளிலோ எனக்கு துணை.
❤ என் உண்மையுள்ள நண்பர்களே, என்னை கொல்லுங்கள்
மரணத்தில் தான் வாழ்வு உண்டு
என் வாழ்வோ, என் மரணத்தில் உள்ளது
காதல் என்பது காதல் முன் நிர்வாணியாக இருப்பது
எப்பொழுது உன்னை நிர்வாணமாக்குகிறாயோ
அப்போதே நீ நிரப்பப்படுவாய்
உனக்கும் எனக்கும் இடையில் இருப்பது 'நான்' மட்டுமே
நீ மட்டும் நிறைந்திருக்க, அந்த 'என்னை' வெளியேற்று!
❤ இறைவன் நிமித்தம், வழிபாட்டை மறுத்துவிட்டேன்
முஸ்லிம்களுக்கு அது பாவம் என்றாலும்,
அந்த மறுப்பு எனக்கு கடமையாக இருந்தது.
முஸ்லிம்களுக்கு அது பாவம் என்றாலும்,
அந்த மறுப்பு எனக்கு கடமையாக இருந்தது.
❤ உனக்காக மட்டுமே பார்க்கும் கண்களை
என் இதயம் பெற்றுள்ளது,
அதுவும் உன் கையிலேயே உள்ளது.
❤ இறைவனை உங்களால் கண்டுகொள்ள முடியவில்லையா
அவன் அடையாளத்தையாவது அறிய முயலுங்கள்.
நானே உண்மையின் ஊடான படைப்பு உண்மை, நித்திய உண்மை.
என் இதயம் பெற்றுள்ளது,
அதுவும் உன் கையிலேயே உள்ளது.
❤ இறைவனை உங்களால் கண்டுகொள்ள முடியவில்லையா
அவன் அடையாளத்தையாவது அறிய முயலுங்கள்.
நானே உண்மையின் ஊடான படைப்பு உண்மை, நித்திய உண்மை.
❤ உனை சந்திக்க,
முகத்தின் பின்னிருக்கும் முகத்தை பார்க்கிறேன்
தோற்றத்தின் பின்னிருக்கும் தோற்றத்தை பார்க்கிறேன்
அதிகாலை தென்றல் போல்
உள் கடந்து செல்கிறேன்
உன் உருவைக்கான
❤ என் ஒன்றே, உன்னுள் ஒன்றியிருக்கும் ஒன்றாக
என்னை உன்னால் மட்டுமே செய்யமுடியும்
உன் ஒருமை (oneness) மதத்தின் சாலைகளால் அடையப்படவில்லை
உண்மை,
உண்மையால் மூடப்பட்ட உண்மை நான்
உண்மையை தன்னிலிருந்து பிரிக்கமுடியாது
உமது இருப்பு ஒரு விடியல்
எல்லா திசைகளிலிருந்தும் ஒளிரும் ஒளிக்கதிர்.
என்னை உன்னால் மட்டுமே செய்யமுடியும்
உன் ஒருமை (oneness) மதத்தின் சாலைகளால் அடையப்படவில்லை
உண்மை,
உண்மையால் மூடப்பட்ட உண்மை நான்
உண்மையை தன்னிலிருந்து பிரிக்கமுடியாது
உமது இருப்பு ஒரு விடியல்
எல்லா திசைகளிலிருந்தும் ஒளிரும் ஒளிக்கதிர்.
❤ அவன்மீது வைத்திருக்கும் எனது அன்பிற்காக
என்னை குறைகூறுகிறவர்களே!
நான் யாரை பாடுகிறேன் என்று நீங்கள் அறிந்திருந்தால்
உங்கள் பழியை நீக்கிவிடுவீர்கள்
பிறரோ, வெளியே யாத்திரை மேற்கொள்கிறார்கள்
ஆனால் எனது யாத்திரையோ,
நான் எங்கிருக்கிறேனோ அந்த இடத்தை நோக்கியுள்ளது.
பிறரோ, காணிக்கைகளை பலியிடுகிறார்கள்
எனது காணிக்கையோ, என் இதயமும் இரத்தமும்.
அவர்களோ, ஆலயங்களை சுற்றுகிறார்கள்,
ஆனால் தங்களுக்குள்ளிருக்கும் இறையை சுற்றவேண்டும்
புனிதகட்டிடங்களை சுற்றவேண்டிய தேவையில்லை.
❤ என் இதயத்தில் நீ இருப்பது என் இதயத்தின் முழுமை
உன் இடத்தை எவராலும் எடுத்துக்கொள்ள முடியாது
தோலுக்கும் எலும்புக்கும் இடையில் என் ஆன்மா உன்னை தங்கவைத்துள்ளது
எப்போதாவது உன்னை இழக்க நேர்ந்தால் நான் என்ன செய்வேன்?
❤ வேதனையானது யாதெனின்
உன்னிலிருந்து நான் வெகுதொலைவில் இருப்பதுபோலவும்
என்னில் நீ இல்லாதது போலவும்
உன்னக்கு நான் அழைப்புவிடுத்துக்கொண்டிருப்பது
தேவை அறியாமல், உன் கிருபையை நான் தொடர்ந்து கேட்கிறேன்
இவ்வளவு பற்றுடைய துறவியை நான் என்றும் பார்த்ததில்லை
❤ அந்த உன்னத முழுமையை
என் சிறிய மனித இருப்பால் தாங்க முடியும்
என் சிறிய இருப்பின் சுமை காரணமாக,
பூமியால் என்னைத் தாங்க முடியவில்லை.
இது விசித்திரமானதாயிருக்கிறது.
மொழிபெயர்ப்பு : தீயவன் & இயாகப்பு
NOTE: என் புரிதலின் படி இந்த கவிதைகளை மொழிபெயர்த்துள்ளேன், ஒருவேளை இவைகளில் பிழையிருக்க கூடும்.
அல் - ஹலாஜ் பற்றி : https://ennaththinkural.blogspot.com/2020/05/blog-post_4.html?m=1
NOTE: என் புரிதலின் படி இந்த கவிதைகளை மொழிபெயர்த்துள்ளேன், ஒருவேளை இவைகளில் பிழையிருக்க கூடும்.
அல் - ஹலாஜ் பற்றி : https://ennaththinkural.blogspot.com/2020/05/blog-post_4.html?m=1
No comments:
Post a Comment