Breaking

Saturday, May 9, 2020

பௌத்தமும் நாகர்களும் பகுதி 2


*முன்குறிப்பு: இவைகள் வெறும் அனுமானங்களே

பௌத்தமும் நாகர்களும் - பகுதி 2

சாத்தான்கள் யார்?:
சாத்தான் என்பது இறைவனுக்கு எதிரியாகவும் மக்களை இறைவமிடமிருந்து பிரிப்பவனாகவும் சொர்க்கத்திலிருந்து நரகத்திற்கு இட்டுச்செல்பவனாகவும் மத நூல்கள் கூறுகிறது. ஆரிய புராணங்களில் சாத்தான்களை அசுரர்கள், ராட்சசர்கள், அரக்கர்கள், என்றும் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களில் பகைவன்/எதிரி, தீயவன், குற்றஞ்சாட்டுகிறவன்(கலகக்காரன்), சர்ப்பம்(நாகம்/dragon), சாத்தான், பிசாசு என்றும் கூறுகிறது.

சங்ககால தமிழர்/நாகர் மக்களின் பெயர்கள் பெரும்பாலும் சாத்தன்/சாத்தான்,சாத்தி - கொன்றன்,கொற்றி என்றிருக்கும். நீலகேசியில் பூதவாதியின்(உலகாயதம்) பெயர்கூட 'பிசாசகன்' என்பதும் குறிப்பிடத்தக்கது. சாத்தன்/சாத்தான் என்பது புத்தரின் பெயர்களுள் ஒன்று என்றும் நாம் அறிந்திருக்கிறோம். குறிப்பாக வணிக நாகர்கள் இப்பெயர்களிலேயே அழைக்கப்படுகிறார்கள் இதனை சங்கஇலக்கியங்களில் காணலாம். இவர்கள் கடவுள் இல்லை என்ற கொளகைகளை உடைய சமயத்தை சேர்ந்தவர்களாகவும், தன்னை அறிவதே இறைத்தன்மை என்பதிலும் நம்பிக்கையுடையவர்களாய் இருந்தவர்கள். சொல்லப்போனால், இவர்கள் மதங்கள் சொல்லும் இறைவனுக்கு எதிரிதான். மதங்களுக்கு வேதங்களுக்கும் எதிராக கலகம் செய்த கலகக்காரர்கள்.

ஆரியர்கள் அசுரர்களாக/ராட்சசர்களாக தங்களது புராணகதைகளில் சித்தரித்திருப்பது இந்த நாகர்களையே/தென்னிந்திய மக்களையே என்பது நாம் அறிந்த ஒன்றே. ஆனால் இந்த ஆபிரகாமிய மதங்கள் (யூத,கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்கள்) கூறும் சாத்தான் நாகர்களையே என்று உறுதியாக கூறமுடியாவிட்டாலும். சில ஒற்றுமைகள் அப்படியும் இருக்கக்கூடும் என்ற யூகத்தை ஏற்படுத்துகிறது. 

வேதாகமம் கூறும் சாத்தான் யார்?:
எபிரேய மொழியில் எழுதப்பட்ட ஆதியாகமத்தில் (genesis) கூறப்படும் ஆதாம் ஏவாள் கதையில் வரும் சர்ப்பம் (serpent) "Nahash" - நாஹாஸ் என்றே எழுதப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தை நாகத்தை குறிக்கும் சொல்லாகவும் இருப்பதால் இது இங்கிருந்தே (இந்திய துணைக்கண்டம்) சென்றிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. தமிழில் நாகம் என்பது வடக்கில் நாகா, நாகாஸ் என்றே சொல்லப்படுவதையும் காண்க.

முதலில் இக்கதையை பற்றி சுருக்கமாக சொல்கிறேன்:

ஆதாம், ஏவாளை இறைவன் படைத்து அத்தோட்டத்தில் நடுவில் உள்ள ஒரே ஒரு மரத்தின் காணியைமட்டும் உண்ணக்கூடாது அப்படி உண்டால் இறப்பீர்கள் என்று எச்சரித்திருப்பார். பிறகு சர்ப்பமானது ஏவாளிடம் வந்து இத்தோட்டத்தில் உள்ள மரத்தின் கனிகளை புசிக்ககூடாதென்று இறைவன் சொன்னாரா என்று கேட்கும். அதற்கு ஏவாள் இத்தோட்டத்து நடுவிலுள்ள மரத்தின் கனியை உண்டாலோ தொட்டாலோ இறக்கப்படுவோம் என்று இறைவன் கூறினார் என்றாள். இல்லை நீங்கள் , சாகவே சாவதில்லை இக்கனியை புசித்ததும் உங்கள் கண்கள் திறக்கப்பட்டு கடவுளை போல் இருப்பீர்கள் என்பது கடவுளுக்கும் தெரியும், நீங்கள் நன்மை தீமை அறிந்தவர்களாய் இருப்பீர்கள் என்று  சர்ப்பம் போதித்த பிறகு அவர்கள் அக்கனியை புசித்ததும் அவ்வாறே நிகழ்ந்தது. இதனால் இறைவனின் கோபத்தால் அத்தோட்டத்தை விட்டு விரட்டப்பட்டார்கள்.

இக்கதையில் உண்மையில் யார் பொய்யன் என்று அறிந்திருப்பீர்கள். சர்ப்பம் உண்மையை மட்டுமே போதித்தது. இக்கதை பலவாறாக புரிந்துகொள்ளக்கூடியது அதில் ஒன்று பௌத்தர்கள் சொல்வது போன்று 'இறைவனை வணகுவதிலிருந்து, அறியாமையிலிருந்து ஞானத்தை புசிப்பதன் மூலம் தன் இறைநிலையை அடைவது' பற்றி இருப்பதாக தோன்றுகிறது. புத்தரும் பிற அவைதீக தத்துவங்களும் இவ்வாறு தானே போதித்தது. 

நாகம் ஞானத்தின் குறியீடு?:
வேதாகமத்தில் உள்ள நாகம்/சர்ப்பம் சாதாரண பாம்பு அல்ல. ஆசிய நாடுகளில் கூறப்படும் dragon போன்ற ஒன்று என்று வேதாகமத்திலேயே விளக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த வலுசர்ப்பப்மே (Dragon/Leviathan) சாத்தான், பிசாசு (devil) என்று அழைக்கப்படுவதாகவும் revelation 12:9 இல் கூறப்பட்டுள்ளது.
வேதாகமம் கூறும் சர்ப்பம் (Dragon/Leviathan) 
இப்படி அவர்கள் சாத்தானாக பார்க்கும் வலுசர்ப்பம்(dragon) ஆசியாவில் ஞானம், செல்வம்,உயர்ஆற்றல், பெருந்தன்மை என்று புனிதமான குறியீடாக மட்டுமே பார்க்கப்படுகிறது. (ஆனால், நாகர்களுக்கு எதிரான ஆரிய - இந்துமதம் பிற்காலத்தில் தான் தங்கள் வழிபாட்டில் நாகத்தையும் இணைத்துக்கொண்டது)
ஆசியநாடுகளில் உள்ள புத்தர் சிலைகள் ஓவியங்களை பார்த்தாலும் இந்த வலுசர்ப்பம்/dragon புத்தருடனே காட்சியளிக்கும். மேலும், சில புத்தர்சிலைகள் ஏழு தலை கொண்ட நாகத்துடன் இருக்கும். அவை அசீவகத்தின் ஏழு படிநிலைகளை குறிக்கும் விதமாக தென்படுகிறது.

தொடரும்...

-தீயவன்

No comments:

Post a Comment