யூதர்கள் தாங்கள் மிக உயர்ந்தவர்கள் எனவும், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் எனவும் எண்ணுவது வழக்கம். சாமானியர்கள், ஏழைகள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அன்று.
இந்தியாவில் பிராமணர்கள், சூத்திரர்களை தீண்டத்தகாதவர்களாக நடத்துவது போல், யூதர்கள் சாமானியர்களை நடத்துவது வழக்கம். ஒரு பிராமணன் தீண்டத்தகாத ஒரு பெண்மணியிடம் சென்று பருகுவதற்குத் தண்ணீர் கேட்பது காணமுடியாத ஒரு காட்சி. அது நடக்கவே முடியாதது அந்தப் பெண்மணியைத் தீண்டவே முடியாது.
இந்தியாவில் இம்முட்டாள்தனம் அவனுடைய தர்க்கரீதியான முடிவிற்கே சென்றுள்ளது என்பதை அறிந்தால் நீ வியப்படைவாய்.
தெற்கிலோ தீண்டத்தகாதவன், தீண்டத்தகாதவன் மட்டுமின்றி அவனது நீழக்கூட தீண்டத்தகாததே, தீண்டத்தகாதவனின் நிழல் உனது உடல் மீது விழுந்து விட்டால் நீ கட்டாயம் குளித்தாக வேண்டும்.
ஏதோ ஒரு தீண்டத்தகாதவன் ஒரு நகரின் வழியாகச் சென்றால் ஏதாவது பிராமணர் இந்தப் பகுதியில் இருந்தால் அவன், 'நான் இந்தப் பாதையில் செல்கிறேன், நான் செல்ல தயவுசெய்து அனுமதியுங்கள். எனது நிழலைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்' என உரக்கக் கூவ வேண்டும். ஏனெனில் அவன் உன்னைத் தொட மாட்டான். அது சாத்தியமற்றது.
ஒரு கடைவீதியில், ஒரு கூட்டத்தில் அவனது நிழல் உன்னைத் தொட்டுவிடக்கூடும் ஒரு பெருங்குற்றம் எனக் கொள்ள அதுவே போதுமானது. இப்போது முட்டாள் தனம் அதன் மிகப்பெரிய இறுதிக்கே போக முடியும்.
இம்மக்கள் மேற்கு நாடுகளுக்கு, உலகிற்கே போதிப்பதற்க்கு, இந்த பிராமணர்கள், பிராமண சன்னியாசிகள், இந்த இந்துக்கள் செல்கின்றனர். உலகு முழுவதற்கும் அவர்கள் செல்கின்றனர். உலகிலேயே தாங்கள்தான் தலைசிறந்த ஆன்மீகவாதிகள் என்ற கருத்து அவர்களுக்கு. உலகம் முழுவதையும் மாற்றுவதற்கு ஆண்டவன் அவர்களையே நம்பியிருக்கிறன் என்ற எண்ணம்.
இந்நாட்டில் ஒருமுறை ஜனாதிபதியாக இருந்த டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அமரிக்காவிற்கு சுற்றுலா சென்றார். ஒரு பல்கலைகழகத்தில் இந்துக்கள் பேசுவது போல் 'இந்த உலகிலேயே தாங்கள் தான் மிக உயர்ந்தவர்கள் எனவும், உலகிற்கு உழைப்பதற்காகவும் உலகை மாற்றுவதற்காகவும் தாங்கள் வாழ்வதாக உரையாற்றினார்'.
ஒரு இளைஞன் எழுந்து நின்று, 'ஐயா, நீங்கள் இந்துக்கள், மிக உயர்ந்தவர்கள், உலகிற்கு அவர்களே உதவமுடியும் என்று கூறுகிறீர்கள், ஏன் அவர்கள் தங்களுக்குத் தங்களே உதவிக் கொள்ளவில்லை' எனக் கேட்டான்.
இந்த முட்டாள் இராதாகிருஷ்ணன் என்ன கூறினார் என்பது உனக்குத் தெரியுமா? அவர் மிகவும் முரட்டுத்தனமாக, ' தலைசிறந்த கிறிஸ்து மற்றவர்களுக்கு உதவவே பிறந்தார், தனக்கு உதவி செய்து கொள்ள அன்று. இந்தியா அடுத்தவர்க ளுக்கு உவதத் தோன்றியதே அல்லாமல் தனக்கு உதவிக்கொள்ள அல்ல' என பதிலளித்தார். இது நான் கேள்விபட்ட ஒன்று. இந்தக் கருத்து மிகுந்த ஆணவமுடன் கூடியது. ஆயினும் யூதர்களின் மனோபாவமும் இதேதான்.
யூதர்களும் இந்துக்களும் மிக, மிக ஒன்று போல் இருப்பவர்களே இந்த இரு மதங்கள் மட்டுமே உலகில் யாரையும் மதம் மாற்றுபவை அல்ல, வேறு எவரையும் மதம் மாறுவதற்கு அனுமதிப்பதும் இல்லை என்பதை நீ மிகவும் வியப்புறுவாய். நீ பிறப்பால் ஒரு யூதனாக இருக்கலாம் அல்லது ஒரு இந்துவாக இருக்கலாம் வேறு வழியேதுமில்லை. ஒரே வழி ஒரு இந்துவாக அல்லது யூதனாக பிறந்து கொள். யூதர்களும் இந்துக்களும் எவ்வித மதமாற்றத்தையும் அனுமதிக்க மாட்டார்கள்.
ஏன்? ஏனெனில் மதமாற்றம் செய்யப்படுவதற்கு தகுதியானவர்கள் யாருமில்லை. ஒர் இந்துவாக எவ்வாறு மதமாற்றம் செய்ய முடியும்? உனது இரத்தம், உனது எலும்பு, உனது எலும்பு மஜ்ஜை, உனது தோல் அனைத்துமே இந்து அல்லாதான். ஒருசில சமயச் சடங்கு செய்வதன் மூலம் உன்னால் எப்படி ஓர் இந்துவாக இயலும்? உனது இரத்தத்தை மாற்ற முடியாது, உனது எலும்புகளை மாற்ற முடியாது எனவே ஓர் இந்துவாக பிறந்தாலே, ஓர் இந்துவாக முடியும். எனவே ஓர் யூதனாக பிறந்தால்தான் ஒரு யூதனாக முடியும்.
இரு மதங்களும் ஆங்காரமிக்கன. எனவே இரண்டுமே மிகுந்த இன்னலுக்குட்பட்டுள்ளன. அந்த இன்னல் அகங்காரத்தின் ஒரு பகுதியாக ஏற்பட்டவையே, அகங்காரத்தால் உருவாக்கப்பட்டதே அது.
- ஓஷோ (நான் உனக்குச் சொல்லுகிறேன் 1, அதிகாரம் 9)

No comments:
Post a Comment