*முன்குறிப்பு: இவைகள் வெறும் அனுமானங்களே
பௌத்தமும் நாகர்களும் - பகுதி 1
நாகர்கள் தமிழர்களா? :
பண்டைய இந்திய, இலங்கை வரலாற்றிலும், புராணங்களிலும், பௌத்த நூல்களிலும் நாகர் இன மக்கள் இலங்கை, இந்தியா முதல் தென்கிழக்காசிய நாடுகள் கடந்து பசிபிக் தீவுகள் வரையும் பரவியிருந்த இந்தியாவின் ஆதி பூர்வ குடிகள் என்றே சொல்கிறது. பௌத்த நூல்களையும் மானுடவியல் வரலாற்றையும் ஆய்ந்து அறிந்த அம்பேத்கரும் நாகர்கள் என்போர் தமிழர்களே - திராவிடர்களே என்று கூறுகிறார். சங்க காலத் தமிழகத்தில் இயக்கர், நாகர் என்னும் இனத்தவர் வாழ்ந்திருந்தனர். தமிழ்நாட்டு இயக்கரும், நாகரும் தமிழருள் ஒரு பிரிவினரே. அவர்கள் பிற்காலத்தில் தமிழரோடு கலந்து விட்டனர் என்கிறார் மயிலை சீனி வேங்கடசாமி. மேலும் நாகர் என்னும் சொல்லின் மூலமும் தமிழே.
சங்ககாலத்திலிருந்தே ஆரியர்களுக்கும் நாகர்களும் இடையே போர்கள்/பகைமுரண் நடந்துவந்துள்ளது அது இன்றுவரை ஆரிய திராவிட போராக நீண்டுள்ளது. அக்காலங்களில் நாகர்கள் ஆரியர்களால் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டதை பற்றி அம்பேத்கர் சொல்வதாவது:
"இந்தியாவில் பௌத்தம் பற்றி பிரச்சாரம் செய்தவர்கள் பெரும்பாலும் நாகர்களே என்பதை பௌத்த வரலாற்றை படிப்பவர்கள் தெரிந்துகொள்வார்கள். நாகர்கள் ஆரியர்களின் உக்கிரமான பகைவர்கள். ஆரியர்களுக்கும் ஆரியரல்லாதவர்களுக்கும் இடையே பல உக்கிர போர்கள் நடைபெற்றுள்ளன. ஆரியர்களால் சுட்டெரிக்கப்பட்ட நாகர்களின் ஒருவரைமட்டுமே காப்பாற்ற முடிந்தது அவர் வழி வந்தவர்களே நாங்கள். மிகக் குரூரமான அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் சகித்துக்கொண்டு பொறுமையாக வாழ்ந்துவந்த நாகா மக்கள் துக்கத்திலிருந்து மீள ஒரு மாமனிதர் தேவைப்பட்டார். அந்த மாமனிதரை அவர்கள் கௌதம புத்தர் உருவில் கண்டனர். அதனால் தான் அவர்கள் புத்தரின் போதனைகளை இந்தியா முழுவதும் பரப்பினர். அப்படிப்பட்ட நாகர்கள் நாங்கள்." -அம்பேத்கர்
பார்ப்பன ஆரிய நம்பிக்கைகளுக்கும் அவர்களது ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவே புத்தரின் போதனைகளும் கொள்கைகளும் இருந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. எனவேதான் புத்தரை நாகர்கள் உயர்த்திப்பிடித்தனர். புத்தரைமட்டுமல்ல ஆசீவகம், சமணம், உலகாயதம், சாங்கியம், போன்ற வைதீகத்திற்கு/ வேதத்திற்கு எதிரான கொள்கைகளையும் ஆதரித்துள்ளார்கள்.
இலங்கையை எடுத்துக்கொண்டால், இன்று பௌத்தர்களாக இருக்கும் சிங்களர்கள் உண்மையான நாகர்கள் அல்ல. அவர்கள் வங்காளத்திலிருந்து தனது தந்தையால் துரத்திவிடப்பட்ட விசயன் எனும் இளவரசன் மற்றும் அவனது 700 நண்பர்களின் வம்சாவளிகள். அவர்கள் இலங்கை வரும்முன் நாகர்களே அங்கு வாழ்ந்துவந்துள்ளார்கள். அக்காலத்தில் நாகநாடு அல்லது நாகதீபம் என்று இலங்கையின் வடமேற்கு பகுதியை அழைத்துள்ளார்கள். தமிழகத்திலும் கிழக்காசிய நாடுகளிலும் நகம் என்ற பெயரில் பல இடங்கள் இன்றும் உள்ளது. மேலும், நாகத்தை வழிபடுபவர்கள் தான் நாகர்கள் என்பதை நான் ஏற்கவில்லை. அப்படியிருக்கவும் வாய்ப்பில்லை.
தமிழ் வணிக நாகர்கள் :
கிழக்காசிய நாடுகளுக்கு பௌத்தம் பரவியதற்கு தமிழர்களே/நாகர்களே காரணம் என்றும் சொல்லலாம். அக்காலங்களில் பல நாடுகளுக்கு செல்லும் பாதைகளும், கடல் வழி பாதைகளும் நன்கு அறிந்தவர்கள் தமிழ் வணிகர்களே இவர்களின் பங்கும் இதில் உண்டு என்பதை மறுக்க முடியாது ஏனெனில் அவர்களும் பௌத்தர்களாகவும், சமணர்களாகவும், அசீவகர்களாகவும் இருந்துள்ளனர் என்று தமிழ் இலக்கியங்கள் சொல்கிறது. நாகர்களில் வணிக தொழிலை செய்துவந்த இந்த வணிக நாகர்களின் சமயம் என்னவாக இருந்தது என்பதை சங்க இலக்கியங்கள் என்று சொல்லப்படும் ஐம்பெருங்காப்பியங்களில் காணக்கிடைக்கிறது. அவற்றை பற்றி சுருக்கமாக பாப்போம்.

சிலப்பதிகாரம்: இக்காப்பியத்தை இயற்றிய இளங்கோவடிகள் ஒரு சமணர். கோவலனின் தந்தை "மாசாத்துவான்" (தரை வணிகக்குழு தலைவன்) கோவலன் இறப்பிற்கு பிறகு பௌத்த துறவியானவர். கண்ணகியின் தந்தை "மாநாய்கன்" (கடல் வணிக தலைவன்) ஆசீவக துறவியானவர்.
மணிமேகலை: இக்காப்பியத்தை இயற்றிய சீத்தலை சாத்தனார் (கூலவணிகர்) ஒரு பௌத்த துறவி. இக்காப்பிய தலைவியான மணிமேகலை அதாவது கோவலனின் மகள் எப்படி பௌத்த துறவி (பிக்குணி) ஆகிறாள் என்பதை எடுத்துரைக்கும் கதை. இதில் இவர் இலங்கை (நாக தீபம்), ஜாவா போன்ற கிழக்காசிய நாடுகளில் உள்ள பௌத்த மடாலயங்களையும் அங்குள்ள துறவிகளையும் சந்திக்க செல்வது பற்றியும் கூறப்பட்டிருக்கும்.
குண்டலகேசி: வணிககுலப் பெண்ணான குண்டலகேசி என்பவள் பௌத்த துறவி (பிக்குணி) ஆகி. பௌத்தத்தை பரப்ப ஈடுபடுவதை பற்றி கூறும் காப்பியம் இது.
சீவக சிந்தாமணி: சீவகன் என்பவன் தன் தந்தையான அரசன் அமைச்சினால் கொல்லப்பட்டதால் இவன் பிறப்பு மயானத்தில் நிகழ்கிறது. அப்போது "கந்துவட்டி" எனும் வணிகள் தன் குழந்தையை புதைக்க மயானம் வரும்போது சீவகனை கண்டு தன் வீட்டிற்கு கொண்டுசென்று 'சமண நெறியுடன்' வளர்கிறான் பின் வளர்ந்து கைமாறப்பட்ட தன் தந்தையின் அரசை கைப்பற்றி பின் சமண துறவியாவது பற்றி சொல்லும் ஒரு சமண நூல் இது.
வளையாபதி: நவ கோடி நாராயணன் எனும் வைர வணிகனுக்கு இரண்டு மனைவி அதில் ஒருவர் வேறு குடியை சேர்ந்தவள். இதனால் தன் குலத்தவர்கள் ஒதுக்கும் நிலை ஏற்பட்டதால் அப்பெண்ணை ஒதுக்கிவைத்துவிடுகிறான். அவளுக்கு ஒரு மகன் பிறந்து அவன் புகார் நகரில் வணிகர்கள் கூடியிருக்கும் அவையில் தன் தந்தை இவனே என்று உறைகிறான் பின் இவர்கள் மீண்டும் குடும்பமாய் இணைவதையே இக்காப்பியம் கூறுகிறது. இதுவும் ஒரு சமண நூலே.

இப்படி இந்த காப்பியங்கள் மூலம் இவர்கள் கொண்டிருந்த சமய நம்பிக்கை வைதீகத்திற்கு எதிரானதாகவே இருந்துள்ளதை காணலாம். மேலும் இவர்கள் துறவிகளாகி தன் சமயத்தை பரப்பியது பற்றியும் கூறப்பட்டிருக்கிறது.
சமய மாற்றம்:
சங்கம் மருவிய காலத்தில் மீண்டும் மறுவடிவம் பெற்று தலைதூக்க தொடங்கியது வைதீக மதம் அதுவும் மன்னர்களின் அதிகாரம் மூலம். பக்தி இயக்கம் எழ தொடங்கியது. இவர்களது இலக்கியங்களில் பௌத்தர்கள், சமணர்கள் போன்ற அவைதீக சமயத்தாரை இழிவுபடுத்தியே எழுதியிருக்கிறார்கள். கடவுள் இல்லை எனும் கொள்கையுடைய அவைதீக சமயத்தவர்களுக்கு எதிரான வன்முறைகள், கழுவேற்றங்கள் மன்னர்களின் உதவியுடன் செய்தது. இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு அஞ்சி பலர் அம்மதத்தை தழுவிக்கொண்டார். அரசை பழித்துக்கொண்டு வாணிபம் செய்வது சுலபமல்ல என்று அஞ்சியதாலோ என்னமோ இந்த வணிக நாகர்கள் வைதீக சமயத்தை குறிப்பாக சைவத்தை தழுவிவிட்டார்கள். பிற தொழில் செய்த நாகர்களோ அதிகாரத்திற்கு அஞ்சாமல் இருந்ததால் தங்கள் உடமைகளை இழந்து ஒடுக்குமுறைக்கு ஆளாக்கபட்டார்கள். இழிவானவர்களாக கருதப்பட்டார்கள்.
No comments:
Post a Comment