பெரியார் 18.1.1931-ல 'குடியரசு' இதழ்ல காதலைப் பத்தி ஒரு கட்டுரை எழுதினாரு. அந்த கட்டுரையில காதலைப் பத்தி அவர் சொன்ன சில விஷயங்கள் அறிவுக்குப் பொருந்தாத மாதிரியும், தப்பான புரிதலோடயும் இருக்குது. பெண் ஏன் அடிமையானாள்'ங்கிற புத்தகத்துல 'காதல்' என்ற தலைப்புல அந்த கட்டுரை இடம்பெற்றிருக்கு. படிக்காதவங்க படிச்சிப்பாருங்க.
"யானைக்கும் அடி சறுக்கும்" கதையா, பகுத்தறிவுவாதியா போற்றப்படும் அவரேகூட பகுத்தறிவற்ற கருத்த தெரிவிச்சிருக்காரு. அந்த கருத்து தப்பான முன்னுதாரணத்த அல்லது வழிகாட்டுதலை கொடுக்கக்கூடியது'ங்கிறதால அத விமர்சனத்துக்கு உட்படுத்த நினைக்கிறேன்.
அந்த கட்டுரையோட நோக்கம் என்னன்னா; காதல மிக மிக புனிதமான ஒன்னாவும், அதுமேல பலவகையான கற்பனை கருத்துக்களை ஏத்தி - மிகைப்படுத்தி - இதுதான் காதல்'னு ஒரு போலியான கட்டமைப்ப உருவாக்கி பிறகு அந்த கட்டமைப்பிற்கே பலியாகி, தன்னையும் ஏமாத்தி மத்தவங்களையும் ஏமாத்தி அதன்மூலம் தன் சுதந்திரத்தையும் சுயமரியாதையையும் இழந்து வாழுறத கண்டிக்கும் விதமாவும் ஒரு தெளிவ ஏற்படுத்தும் நோக்கத்துலையும் எழுதப்பட்டிருக்குனு புரிஞ்சிக்க முடியிது. மேலும், வெறும் இன்பத்துக்காகவோ, காசு பணத்துக்காகவோ, ஒருத்தர் பெரிய ஆளுங்கிற ஒரே காரணத்துக்காகவோ வர்ற 'போலி' காதலையும் சாடுறார்.
அவரோட நோக்கம் சரிதான் மாற்றுக்கருத்தில்ல. ஆனா, அவர் சொன்ன சில உதாரணங்களும், காதலை அவர் புரிஞ்சுக்கிட்ட விதமும் ரொம்பவே இடிக்குது. சொல்லப்போனா, அது காதலை இழிவுபடுத்துற மாதிரியும், ஏகப்பட்ட தர்க்கப் பிழைகளோடவும் (Logical Fallacies) இருக்குதுன்னு தான் சொல்லணும். சரி, அந்த கட்டுரையில அப்படி என்னதான் பிழை இருக்குன்னு பார்ப்போம்...
அவரு சொன்ன முரண்பாடான கருத்துக்களின் சாரம்:
"அன்பு, ஆசை, நட்பு இவைகளைத் தவிர காதல்'னு ஒன்னு கிடையாது"
"காதல்னா என்ன? அது எப்படி எப்ப வருது? எப்ப மறையிது'னு சிந்திச்சாலே அது உண்மையில்லாதது, நிலையில்லாதது'னு விளங்கும்"
"ஆணுக்கும் பெண்ணுக்கும் - தங்களுக்குள் இயற்கையா உண்டாக்கக்கூடியது - விளக்கிச்சொல்ல முடியாத ஒன்னு'னு சொல்லப்படுது" (இதை பெரியார் ஏற்கவில்லை)
"ஒரு மனுஷன் ஒரு பொருளை பாத்ததும் அது தனக்கு வேணும்னு ஆசப்படுற மாதிரிதான் காதலும், இதைத்தவிர வேற வழியில உருவாகவாய்ப்பில்ல"
"நேர்ல பாத்ததாலையோ, கேட்டதாலையோ & அழகு, வயசு, அறிவு, அந்தஸ்து, படிப்பு, குணம், சுயநலத்தேவை, Family Background - இதுபோல காரணத்துனால மட்டும்தான் காதல் உண்டாகுது; யாரும் யார்மீதும் காதல் கொள்ளவும் முடியிது. இதைத்தவிர வேற காரணம் இல்ல"
"ஆசை, காமம், மோகம், நட்பு, அறிவீனம், அனுபவமில்லை, ஏமாற்றம் போன்றவற்றைவிட காதல் ஒன்னும் சிறந்தது இல்ல"
"ஆசையைவிட, அன்பைவிட, நட்பைவிட, காதல்னு ஒன்னு இல்ல. இந்த ஆசை அன்பு நட்பு கூட உயிருள்ள பொருள், உயிரற்ற பொருள் (உயர்திணை, அஃறிணை) மேல ஏற்படுவது போல சாதாரணமானதுதானே தவிர வேற ஒன்னும் இல்ல"
காதல் எது'ன்னு அவர் கொடுத்த முதல் விளக்கமே கொஞ்சம் காமெடியாதான் இருக்கு. பூமி'னா என்ன? "காடுகள், மலைகள், கடல்கள், மண், பாறைகள் இவைகள்தான் இதைத்தவிர பூமின்னு ஒன்னு கிடையாது" அப்படின்னு சொல்றது எப்படியோ அப்படிதான் இருக்கு இது. சரி, இதுஒண்ணும் அவ்வளவு பெரிய நகைமுரண் இல்லாதான்... அவர் கொடுத்த விளக்கத்தை ஆராய்வோம்...
அன்பு, ஆசை, நட்பு, காமம் இதெல்லாம்தான் காதலா'னு பாத்தா.. காதல்ல இதெல்லாம் இருக்கும் ஆனாலும் இது மட்டும்தான் காதல் இதைத்தவிர வேற எதுவும் இல்லன்னு சொல்றது தப்பு. அப்படி சொல்லவும் முடியாது.
அதேபோல, ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களுக்குள்ள விளக்கிச்சொல்ல முடியாத - இயற்கையாக தோன்றக்கூடியதுதான் காதல்னு சொல்லறாங்க ஆனா அப்படி இல்ல; அப்படின்னு அவரு நெனைக்கிறாரு.
ஒருவேளை இந்த கேள்விக்கான விடைய இன்றைய உயிரியலாளர்களிடம் கேட்டிருந்தா அவருக்கு தெளிவு/விடை கெடச்சிருக்கும்.
ஆமா, உயிரியலாளர்கள் அது அப்படிதான் நடக்குதுன்னு சொல்றாங்க. நாம என்ன நெனைக்கிறோம்; நீண்ட நாள் பழகினதுக்கப்றம்தான் காதல் உண்டாகும்ன்னு நெனைக்கிறோம் ஆனா First Sight 'லயே கூட காதல் உண்டாகும்ன்னு சொல்றாங்க. ஒருத்தர பாத்ததும் அந்த நொடி பொழுதுக்குள்ளையே கூட நம்ம மூளை வேகமா செயல்பட்டு அவங்கதான் நமக்கு சரியான துணை'னு நமக்கு signal கொடுக்குமாம். அதனாலதான், நாம பலபேரை பாத்தாலும் ஒருசிலரே பாக்கும்போது மட்டும் நமக்குள்ள காதல் ஈர்ப்பு'னு சொல்லிக்கிற அந்த இனம்புரியாத feel உண்டாகுது.
பெரியார் சொல்றமாதிரி நேர்ல பாத்ததாலையோ, பழகியதலையோ & அழகு, அறிவு, குணம் இதெல்லாம் பாத்துகூட காதல் வரலாம். ஆனா அதுகூடவே அந்தஸ்து, படிப்பு, சுயநலத்தேவை, Family Background பாத்து காதல் உண்டாகுதுனு அவர் சொல்றது தப்பு (இதையெல்லாம் ஏன் இடையில செத்தாருன்னு தெரியல). ஏன்னா இதெல்லாம் காதலே இல்ல; ஏமாற்றுத்தனம்'னு வேணா சொல்லலாம். ஆனா அவரு என்ன சொல்லறாரு; இதுபோல காரணத்துனால மட்டும்தான் காதல் உண்டாகுது; யாரும் யார்மீதும் காதல் கொள்ளவும் முடியிது. இதைத்தவிர காதல் உண்டாக வேற காரணம் இல்ல'னு. இது எப்படி இருக்குன்னா; போலி டாக்டர் - போலி மருத்துவமனை இருக்குறதாலயே மருத்துவம் என்பதே பொலிதான், உண்மையில்லாதது னு சொல்றதுபோல இருக்கு.
மேலும், அழகு, அறிவு, குணம் இதெல்லாம் பாக்காமையும் காதல் வரும்'ங்கிறதுதான் உயிரியல் உண்மையும்கூட. அதேபோல, ஒரேநேரத்துல ஒருவருக்கு வந்த உணர்வு இன்னொருவருக்கு வராமலும் போகலாம். அதுக்காக யாருக்குமே; ஒரே நேரத்துல ரெண்டுபேருக்கும் ஒருதர்மேல ஒருத்தருக்கு அந்த உணர்வு ஏற்படாதுனு சொல்லிடவும் முடியாது.
உயிரியல் ரீதியா பாக்கும்போது அது நாம கட்டமைச்சி வச்சிருக்கும் அழகு, தோற்றம், நிறம், வயது, இனம், சாதி, மொழி இவைகளை கணக்குப்போட்டு அந்த உணர்வு ஏற்படுவதில்லை. அதுக்குன்னு தனியா வேறுவகையான பட்டியல் இருக்கு. அதுபடிதான் அது கணக்குப்போட்டு அவருதான் நமக்கான இணை'னு signal கொடுக்குது. ஈர்ப்பு ஏற்பட்டு காதல்னு சொல்லப்படுற அந்த உணர்வு உண்டாகுது'ங்கிறதையும் நாம புரிஞ்சிக்கணும்.
"காதல்னா என்ன? அது எப்படி எப்ப வருது? எப்ப மறையிது'னு சிந்திச்சாலே அது உண்மையில்லாதது, நிலையில்லாதது'னு விளங்கும்" னு சொல்றாரு. கண்டதும் காதலோ, பழகிய காதலோ, ஈருடல் சேர்ந்த காதலோ எந்த காதலா இருந்தாலும் அது மறைய கூடியதுதான்'னு சொல்றாரு. சரிதான் இங்கு எதுவுமே நிலையானது இல்ல, தோன்றியும் மறைந்தும் கொண்டுதான் இருக்கும் அதற்காக; அது உண்மையில்லாதது'னு சொல்லமுடியுமா? இது பகுத்தறிவான தர்க்கமா?
அடுத்து; "ஆசை, காமம், மோகம், நட்பு, அறிவீனம், அனுபவமில்லை, ஏமாற்றம் போன்றவற்றைவிட காதல் ஒன்னும் சிறந்தது இல்ல"னு சொல்றாரு. இது அவரோட அறியாமைய காட்டுது. இதுலகூட அறிவீனம், அனுபவமில்லை, ஏமாற்றம் 'லா ஏன் சேக்கணும்? இவைகள்கூடத்தான் நிலையில்லாத உணர்வுகள். இவைகளை விடவும் காதல் தரம் தாழ்ந்ததா என்ன? பரிணாமத்தினூடாக நமக்கு கிடைச்ச மிக முக்கியமான ஒண்ணுதான் காதல். அது இயற்கைத் தேர்வு (Natural Selection) சம்மந்தப்பட்டது. அதன் முக்கியத்துவத்தை உயிரியலாளர்களிடம் கேட்டால்தான் புரியும். இப்படி மட்டம்தட்டுவது சரியல்ல.
"ஆசையைவிட, அன்பைவிட, நட்பைவிட, காதல்னு ஒன்னு இல்ல. இந்த ஆசை அன்பு நட்பு கூட உயிருள்ள பொருள் உயிரற்ற பொருள் (உயர்திணை, அஃறிணை) மேல ஏற்படுவது போல சாதாரணமானதுதானே தவிர வேற ஒன்னும் இல்ல"
சரிதான், ஆசை அன்பு நட்பு எல்லாம் அப்படிதான். ஆனா காதல் உணர்வு அப்படி இல்ல. உயிரற்ற பொருள்மேலெலாம் ஏற்படாது.
பின்குறிப்பு: இந்த விமர்சனத்தை எழுத காரணம் என்னவென்றால். ஒரு பெரியாரியவாதி Facebook இல் ஒரு பதிவிட்டிருந்தார்; Love Failur ஆன ஒரு பெண்ணிடம் காதல் என்பதே பொய் அப்படி ஒரு சிறப்பானதான உணர்வு ஏதும் இல்லை என்று கூறியதாகவும் முதலில் அவள் அதை ஏற்காமல் பிறகு புரிந்து அந்த துக்கத்திலிருந்து மீண்டுவந்ததாக ஒரு கவிதையை போன்று எழுதமுயற்சித்த ஒரு பதிவு அது. முடிவில் வாழ்கபெரியார் என்று ஹார்டின் விட்டிருந்தார். எதைவைத்து, ஏன் காதல் என்பதே பொய் அப்படி ஒரு சிறப்பானதான உணர்வு ஏதும் இல்லை என்று கூறினீர்கள் என்று கேட்டால் 'அன்பு, ஆசை, நட்பு இவைகளைத் தவிர காதல் என்ற சிறப்பான ஒன்று இல்லை' என்று பெரியார் சொன்னதையே சொன்னார். இந்த வார்த்தை விளையாட்டை தாண்டி - காதல் என்ற உணர்வு இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டால் அதற்க்கு அவரிடம் பதிலில்லை.
பெரியார் என்ன சொல்லியிருக்கிறார் 'யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே' என்று புத்தர் சொன்னதையே சொன்னார். ஆனால் அவரின் சீடர்கள்; பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இவர்களோ பகுத்தறிவை உபயோகிப்பதே இல்லை என்றே தோன்றுகிறது.
காதல் என்பது என்ன என்ற விசாரத்தை மேற்கொள்ளாத ஒருத்தர் யாரோ சொன்ன கருத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு அதை பிறருக்கும் உபதேசிப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் மற்றும் ஆபத்தானது! அதனால்தான் இதை எழுதவேண்டியதாகிவிட்டது.
- தீயவன்

No comments:
Post a Comment