Breaking

Monday, February 16, 2026

ஞானப் பிதற்றல் - 2

 

என் தாழ்நிலையோ சிலர்க்கு நகைப்பு
உயர்வோ சிலர்க்கு வெறுப்பு
உயர்வும் தாழ்வும் மூடர் கணக்கு
- தீயவன்

வீழ்ந்தழுந்து கிடப்பாரின் ரணத்தைக் கிளறி
குருதிவாடை முகர்ந்தின்பம் காண்பாரை
மிஞ்சிய கொடுமிருகமுண்டோ இவ்வுலகில்!
- தீயவன்

அகந்தையும் ஆணவமும் வெறுப்பும் விரோதமும்
கபடமும் காழ்ப்புமுடையோர் பேசிச்செல்வர்
குத்தலும் குதர்க்கமும் வஞ்சமும் வன்மமும்
நக்கலும் நகைப்பும் எள்ளலும் எகத்தாளமுமாய்
- தீயவன்
களிப்பில் வஞ்ச வாஞ்சைத்தூவிச் சென்றது
செருக்கறுக்கா நெஞ்சம் என் நிலைகண்டு!
- தீயவன்



No comments:

Post a Comment