ஊர் தெரு, பறைச்சேரி, சக்கிலித்தெரு, இருளக்குறி(ட்)ச்சி என்று பிரிந்திருக்கும் எல்லா கிராமங்களிலும் உள்ள வீடுகள் ஒன்று போலவே இருந்ததில்லை. இன்றைய காலத்தில் பெரும்பாலும் வேறுபாடுகள் தென்படாமல் இருக்கலாம் ஆனால் ஒரு பதினைந்து, இருபது வருடங்களுக்கு முன்பு சென்று பார்த்தல் அந்த வேறுபாடு தெள்ளத் தெளிவாக தெரியும்.
ஒரு கிராமம் என்றால் அக்கிராமத்திற்கு செல்லும் பாதையின் இருபக்கமும் வீடுகள் இருக்கும் அவ்வீடுகள் சாலையை/பாதையை பார்த்தவாறு வாசல்கள் இருக்கும். ஆனால் அக்காலத்தில் எல்லா வீடுகளும் அதாவது ஊர் தெரு, பறைச்சேரி, சக்கிலித்தெரு என்று எல்லாமும் ஒன்றுபோல இருக்காது. வாசல் மட்டுமல்ல வீடுகளின் வடிவமைப்பும் வெவேறானதாக இருக்கும்.
ஊர்த்தெருவிலுள்ள வீடுகள் மட்டும் தான் சாலையை பார்த்தவாறு வாசல்கள் கட்டப்பட்டிருக்கும். பறைச்சேரியிலோ, சக்கிலித்தெருவிலோ உள்ள வீடுகளின் வாசல்கள் சாலையை பார்த்தவாறு கட்டப்பட்டிருக்காது. சாலையை பார்த்தவாறு பின் வாசல் இருந்தாலும் அது மூடப்பட்டே இருக்கும். ஒருவேளை வாசல் சாலைக்கு side ஆகா அல்லது சாலையை பார்த்தவாறு இருந்தால் அதை மறைக்கும் விதமாக வேலி/தட்டி கட்டப்பட்டிருக்கும்.
Example Diagram |
சமீப காலங்களில்தான் - கற்களால் (cement) வீடுகள் கட்ட தொடங்கியதும் சாலையை பார்த்தவாறு வாசல்களுடன் தலித்துகளின் வீடுகள் கட்டப்பட்டது. தலித் குடியிருப்பு பகுதிகளில் பதினைந்து வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாத வீடுகள் ஏதேனும் இருந்தால் சென்று பாருங்கள் அவைகள் இன்னும் அதே பழைய முறையில் வீட்டின் பின்புறம் சாலையை பார்த்தவாறு கட்டப்பட்டிருக்கும்.
இதுமட்டுமல்ல, சுதந்திரம் பெற்றபிறகு கிராம நலனுக்காக அரசாங்கத்தால் பள்ளிகள், நியாய விலைக்கடை, water tank , பொது கழிப்பிடம், நூலகம் போன்றவர்களெல்லாம் ஊர்தெரு இருக்கும் பகுதிகளியிலே எழுப்பப்பட்டது. பல கிராமங்களுக்கு சென்று பார்த்தல் இதிலுள்ள உண்மை புரியும். ஏன் இந்த பாகுபாடு?
ஊர்த்தெருவில் உள்ள வீடுகளின் வாசல் சாலையை பார்த்தவாறு இருக்கும்போது தலித்துகளின் வீடுகள் மட்டும் ஏன் அப்படி இல்லை. எதனால் இந்த வழக்கம்? ஊர்தெரு மட்டும்தான் கிராமத்தின் மைய்யமா? சில சாதிகள் மட்டும் ஊர்த்தெருவில் ஒன்றாக வாழும்போது தலித்துகள் ஏன் தனித்தனியாகவும் வீட்டின் வாசலை கூட நடைபாதைக்கு மறைவாக இருக்கும்படியும் வைத்து வாழ நேர்ந்தது? எல்லோரும் தமிழர்கள் என்றால் இவர்கள் மட்டும் யார்? உலகில் மூத்தகுடி, தலைசிறந்த நாகரீகம் கொண்ட குடி, அறிவாற்றல் கொண்ட குடி என்றெல்லாம் மார்தட்டிக்கொள்பவர்களே சக தமிழனை இப்படி தீண்டப்படாதவனாக நடத்திக்கொண்டிருந்த இக்குடி உண்மையிலேயே உங்களின் அந்த புகழாரத்திற்கு தகுதியுடையதுதானா என்று சிந்தித்துப்பாருங்கள்.
இங்கே இழிவாக பார்க்கப்படவேண்டியவர்கள் தலித்துகள் அல்ல. அவர்களை இழிவானவர்களாக கருதி மனிதாபிமானமற்ற/முட்டாள்தனமான செயல்களை சமூக கடமைபோல் செய்துகொண்டு பக்குவமடையாத ஒரு கூட்டம் இருந்திருக்கிறது என்று வரலாறு அவர்களை காரி உமிழும்.
- தீயவன்
No comments:
Post a Comment