Breaking

Thursday, August 22, 2024

கோலார் தங்கவயலும் பௌத்தமும் | பகுதி 1

 


    தங்கலான் படத்தில் புத்தர் சிலை இருப்பதை பௌத்தத்திற்கும் பிரமணியத்திற்கும் இடையேயான போராட்டத்தின் குறியீடாக எடுத்துக்கொண்டாலும் வரலாற்றுப்படி அது சமண பகுதி தான். பௌத்தத்திற்கும் அப்பகுதிக்கும் சம்மந்தமில்லை என்றே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், உண்மையில் பௌத்தத்திற்கும் கோலார் 'க்கும் தொடர்புண்டு. அதுவும் அசோக அரசுக்கும் அப்பகுதிக்கும் தொடர்பிருந்திருக்கிறது அதற்கு சான்றாக அப்பகுதிகளில் அசோக கல்வெட்டுகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (அதே அசோகர் காலத்தில் அவர் எல்லைக்குட்படாத தமிழ் நிலத்திலும் பௌத்தம் பரவியது. மேலும் பௌத்த தமிழ் வணிகர்களுக்கும் அசோக பேரரசுக்கும் தொடர்பிருந்திருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்)

கல்வட்டு கிடைக்கும் பகுதிகள்: கோலார் பகுதியான மஸ்கி 'யிலும், கொப்பல் எனும் பகுதியில் 2 கல்வெட்டுகளும், பிரம்மகிரியில் 3 கல்வெட்டுகளும், சில கல்வெட்டு yerrangudi மற்றும் pattikonda போன்ற வைரத்திற்கு பேர்பெற்ற பகுதிகளுக்கு அருகிலும் உள்ளது.

அசோகர் தக்காணத்தை நோக்கி வந்ததற்கு கோலார் பகுதியான துங்கபத்திரா ஆற்றுப்பகுதிகளில் காணப்படும் தங்க வளத்திற்காக - தக்காணப் பகுதிகளிலுள்ள வளங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்க்காக என்று சில வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள்.



மேலேயுள்ள கல்வெட்டுகள் கிடைக்கும் பகுதிகளில் பொதுவாக இருப்பது அவைகள் கோலாரை போல வளம் நிறைந்த பகுதிகளாக இருப்பது புலனாகிறது. இதுமட்டுமல்ல, பௌத்தர்களின் ஆட்சிக்குட்டபட்ட பல பகுதிகள் இயற்கைவளம் பொருந்தியதாகவே இருந்துள்ளது.

உதாரணமாக, ஆப்கனிஸ்தானிலுள்ள "மெஸ் ஐநாக்" எனும் பகுதி செப்பு வளம் நிறைந்தது. அங்கே செப்பு சுரங்கங்கள் உள்ளது அதில் பௌத்தர்களின் ஈடுபாடும் இருந்துள்ளது - அங்கே பௌத்தம் செழித்திருந்தது.




அதேபோல் பௌத்தப்பகுதியான காந்தாரத்தை எடுத்துக்கொண்டால் அங்கே, இரும்பு, செப்பு, பல வண்ண இரத்தின கார்கள், இன்னும் பல கொண்ட வளமான பகுதி.

கர்நாடகாவில் உள்ள Jonnagiri (சுவர்ணகிரி - தங்கமலை) யும் தங்க வளம் கொண்டது. அசோகர் காலத்தில் அவரது பேரரசின் தெற்குப் பகுதியின் தலைமையகமாக இது இருந்துள்ளது.

இவைகள் மூலம் நமக்கு தெரியவருவது என்னவென்றால் கோலார் மட்டுமல்ல அதைப்போன்ற வளங்களுடைய பல பகுதிகளுக்கும் பௌத்தத்திற்கும் தொடர்பு இருந்திருக்கிறது. எனவே கோலார்' இல் பௌத்த தொடர்பு இல்லையென்று சொல்லுவது அறியாமையே தவிர வேறொன்றுமில்லை.



- தீயவன்

No comments:

Post a Comment