ஒரு வனத்தில் எல்லா செடிகளும்/மரங்களும், எல்லாக் கிளைகளும் ஒரே நேரத்தில் பூப்பதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகவே பூத்திருக்கும். ஒன்று பூத்துக்குலுங்கும் நேரத்தில் ஒன்று மொட்டாக இருக்கும் இன்னொன்று வாடியிருக்கும். அடுத்தநாள் வேறொன்று பூத்துக்குலுங்கும். அதுபோலவே குறிப்பிட்ட பருவகாலத்தில் மட்டுமே பூக்கும் செடிகளும் இருக்கும். எதோ ஒன்றுக்கு எதோ ஒரு பருவம் என்றால் மற்றொன்றுக்கு இன்னொரு பருவம். சிலபூக்கள் பல ஆண்டுகளுக்கு ஒருமுறை.
இதேபோலத்தான் மனிதர்களும். எல்லா மனிதர்களும் ஒரே நேரத்தில் பூத்துக்குலுங்குவதில்லை. பூத்துக்குலுங்கும் மனிதர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே இருக்கிறார்கள்.
இந்த பூ என்ற உவமையை அனைத்திற்கும் பொருத்தி பார்த்துக்கொள்ளலாம் - ஞானம், அறிவு, அன்பு, திறமை, புரிந்துணர்வு,.. etc
- தீயவன்

No comments:
Post a Comment