Breaking

Wednesday, September 11, 2024

முலைப்பால் அருந்தும் ஹோம்லேண்டரின் உளவியல்

 'The Boys' webseries எல்லோரும் பார்த்திருப்பீர்கள். சூப்பர் ஹீரோக்களின் கட்டமைக்கப்பட்ட புனித பிம்பத்தை நமக்கு வெளிச்சம்போட்டு காட்டும் விதமாக எடுக்கப்பட்டிருக்கும். அதில் வரும் முக்கிய சூப்பர் ஹீரோவான Homlander (சூப்பர்மேனின் மாதிரி) கதாபாத்திரம் முலைப்பால் அருந்தும் பழக்கமுடையவராக காட்டப்பட்டிருக்கும். அக்கதாபாத்திரம் உளவியல் சிக்கலுடையதாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.


சூப்பர் ஹீரோக்கள் பணிபுரியும் Vought நிருவனத்தின் Vice-precident ஆகா இருக்கும் Madelyn Stillwell இன் மடியில் குழந்தையைப்போல படுத்துக்கொண்டு அவளது மார்பிலிருந்து பால் குடிப்பான் ஹோம்லேண்டர். அவள் கொல்லப்பட்ட பிறகு தாய்ப்பாலை பாட்டிலில் வைத்து குடித்துக்கொண்டிருப்பான். Homelander இன் இந்த பழக்கத்தை தெரிந்துகொண்ட Firecracker எனும் பெண் சூப்பர்ஹெரோ அவனுக்கு முலைப்பால் கொடுப்பாள். 


இவற்றை பார்க்கும்போது ஓஷோ நினைவில் வந்து சென்றார். ஏனென்றால் இது தொடர்பாக அவர் ஒன்று பேசியிருக்கிறார்.


குழந்தைகள் விரலை சப்பும், எதையாவது வாயில் வைத்து மெல்லும் பசிக்கும்போதோ, பதட்டமாகும்போதோ (tense) அப்படி செய்யும். அப்படியே தூங்கிவிடும். அப்படி செய்வது அதை ஆசுவாசமடைய (relax) செய்கிறது. குழந்தைக்கு விரல் என்பது தாயின் மார்பகத்தின் மாதிரி (substitute). அது உண்மையான முலை இல்லையென்றாலும் குழந்தை விரலை சப்புவதன் மூலம் அந்த உணர்வை பெறுகிறது. 

வெறும் வயிற்றோடு யாராலும் உறங்க முடியாது. தாயின் முலைப்பாலை குடிக்கும்போது குழந்தைக்கு கதகத்தைப்போடும் அன்போடும் உணவு உள்ளே செல்கிறது. குழந்தையும் ஆசுவாசமடைந்து  (relax) தூங்கிவிடுகிறது.

எந்த நாட்டில் குழந்தைக்கு முலைப்பால் கொடுப்பது சீக்கிரம் நிறுத்தப்படுகிறதோ அந் நாட்டில் புகைபிடிக்கும் பழக்கம் தோன்றும். அதனால் தான் மேலைநாடுகளில்  புகைபிடிக்கும் பழக்கம் அதிகமாக உள்ளது. ஏனெனில் அப்பெண்கள் குழந்தைகளுக்கு முலைப்பால் கொடுப்பதை நிருத்தி விடுகிறார்கள். டென்ஷனாக இருக்கும்போது புகைபிடித்து ஆசுவாசப்படுத்துவதும் அதனால்தான். இங்கே முலைக்கு பதில் சிகரெட். 

குழந்தையை முலைப்பால் கொடுப்பதிலிருந்து நிறுத்தி மார்பகத்திடமிருந்து விலக்கிவைத்துவிட்டால் அது குழந்தைக்கு வடுவாக (காயமாக) நிலைத்துவிடும். எல்லா நாகரீக நாடுகளும் மார்பகத்தின் மேல் மோகம்கொண்டுள்ளது (obsessed) இறந்துகொண்டிருக்கும் கிழவனுக்கு கூட மார்பகத்தின்மீது மோகம் உள்ளது.  

 Primitive சமூகத்தில் வளரும் குழந்தைகளுக்கு அப்படி இல்லை. அவைகளுக்கு சலிப்பு ஏற்படும் வரை - அவர்களாகவே நிருத்திக் கொள்ளும் வயது வரும் வரையில் கூட முலைப்பால் கொடுக்கப்படுகிறது. அதனால் தான் அங்கிருக்கும் ஆண்கள் மார்பகங்களால் பீடிக்கப்பட்டவர்களாக இருப்பதில்லை. அங்கிருக்கும் பெண்களுக்கு முலைப்பால் கொடுப்பதால் தன் மார்பகத்தின் வடிவம் மாற்றமடையும் என்ற கவலையும் இல்லை. மேலும் அப்பெண்கள் மேலாடையின்றி சென்றால் யாராவது ஏதாவது செய்து விடுவார்கள் என்ற பிரச்சினையும் இல்லை. மார்பகத்தை யாரும் குரு குருத்து பார்த்து கொண்டிருக்க மாட்டார்கள். 

எனவே குழந்தைகளுக்கு திருப்தியாகும்வரை முலைப்பால் கொடுக்கப்படவேண்டும் இல்லையென்றால் அவற்றிற்கு அது அடிமையாகி விடும் (Addict). வாழ்நாள் முழுவதும் அந்த தேடலிலேயே இருக்கும்.. 

என்று ஓஷோ சொல்லியிருக்கிறார். ஒருவேளை ஓஷோ இதை ஃபிராய்டிய உள பகுப்பாய்விலிருந்து (Psychosexual Stages of Development) எடுத்துக்கூறியிருக்கலாம். ஏனென்றால் பிராய்டியத்திலும் இதுபற்றி உள்ளது.



பிராய்ட் கூறும் இந்த Psychosexual Stages என்பது ஐந்து வகைப்படும். இந்த ஒவ்வொரு stage லும் குறையோ/மிகையோ ஏற்படாமல் சரியாக கடந்தவர்களின் மனம் ஆரோக்கியமானதாக இருக்கும். ஒருவேளை குறை ஏற்பட்டால் - எந்த stage இல் என்னமாதிரி பிரச்னை ஏற்பட்டதோ அதற்கேற்றாற்போல் பட்டியலிடப்பட்டுள்ள உளவியல் சிக்கலை ஏற்படுத்தும்.

முதலாவதாக உள்ள Oral stage (௦-1 வயது) இல் ஏற்படும் குறைபாட்டால் மேலே அட்டவணையில் உள்ளதுபோல குடிப்பது, புகைபிடிப்பது, உண்பது, கடிப்பது, சப்புவது போன்ற விளைவுகளை ஏற்படுத்தும்.



ஹோம்லேண்டர் கதாபாத்திரத்தின் Psychosexual Stages மிக மோசமாகவே இருந்திருக்கிறது. அவன் ஒரு Test Tube Baby. Soldier Boy (Captain America வின் மாதிரி) கதாபாத்திரத்தின் விந்தணுவை கொண்டு Artificial ஆகா சக்திவாய்ந்த குழந்தையாக பரிசோதனை கூடத்தில் உருவாகியிருப்பார்கள். அவனுடைய குழந்தை அனுபவமானது பரிசோதனை கூடத்திலுள்ள எலியை போன்றது. முலைப்பால் கூட கிடைத்திருக்காது. இந்த பிராய்டிய உளவியல் அடிப்படையில்தான் ஹோம்லேண்டர் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கக்கூடும். அவன் Fixation அடைந்திருக்கிறான் அதனால்தான் குழந்தையைப்போல முலைப்பால் அருந்துவதில் மோகம்கொண்டவனாகவும் Oedipus Complex ஐ வெளிப்படுத்தும் விதமாகவும் இருக்கிறான்.


பின் குறிப்பு: இது இந்த கதாபாத்திரத்தை நியாயப்படுத்தும் நோக்கிலோ அல்லது பெண்களை குறைகூறும் நோக்கிலோ எழுதப்படவில்லை. மாறாக இப்படியொரு பழக்கம் ஏற்பட என்ன காரணமாக இருந்திருக்கும் என்று அவர்கள் (ஓஷோ, பிராய்ட்) கருதினார்கள் என்பதை பற்றியே....


- தீயவன்

No comments:

Post a Comment