பெரும்பாலான மக்கள் தற்குறி மந்தைகளாக இருக்கிறார்கள். அற்பமானவற்றையெல்லாம் உயர்வாக கருதுகிறார்கள் உயர்வானதையெல்லாம் அற்பமாக பார்க்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில் பிறக்கும் அடுத்த தலைமுறையினர்களையும் தற்குறி மந்தைகளாகவே மாற்றிவிடுகிறார்கள்.
காக்கா பிடிப்பது, காலை வாருவது, ஏமாற்றுவது, சண்டை சச்சரவு, பொறாமை, தலைக்கனம், நயவஞ்சகம், போட்டி, போலி ஒழுக்கம், போலி எளிமை, போலி கருணை, உருவ கேலி, புறணி, கிசுகிசு, etc ஆகியவை நிறைந்த நிலத்தில் முளைக்கும் நல்ல பயிர்கள் தாக்குபிடிப்பதில்லை. ஒன்று மடிந்துவிடுகிறது அல்லது அவைகளைப்போலவே மாறிவிடுகிறது. தப்பி பிழைத்திருப்பது சிலவே.
இவர்களை பொறுத்தவரை உயர்பதவி பெறுவதற்கு படிக்கவேண்டும், பணம் சம்பாதிப்பதற்கு வேலை செய்யவேண்டும். உழைப்பை சுரண்ட வேண்டும் அல்லது உழைப்பை சுரண்ட ஒப்புக்கொள்ளவேண்டும். சுற்றத்தார்முன் நற்பெயர் பெறவேண்டும். படிக்கவேண்டும் வேலைக்கு செல்லவேண்டும் திருமணம் செய்யவேண்டும் (ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் மட்டும்தான் திருமணம் செய்யவேண்டும் - அதுவும் தன் சாதியில் அல்லது socalled உயர்சாதியில்) உடனே குழந்தைகளை பெற்றுக்கொள்ளவேண்டும் அக்குழந்தைகளைகளையும் தன் விருப்பப்படியே வளர்க்கவேண்டும்.
பொருளாதாரத்தில் உயர்வதும், தன் பொருளாதார தரத்திலிருந்து சரியாமல் இருப்பதுமே இவர்களின் குறிக்கோளாக இருக்கிறது.
இந்த வரையறைக்கு உட்படாதவர்களை அற்பமாக எண்ணுவது.
ஒருவன் வேலையில்லாதவனாக இருந்தால் அவனது குடும்ப உறுப்பினர்கள், உற்றார் உறவினர்கள், தெரிந்தவர் தெரியாதவர் என அனைவரும் குத்திக்காட்டுவது, போலி கரிசனம் காட்டுவது, அல்லது இகழ்வது.
ஒருவன் பொருளாதாரத்தில் உயர்ந்துகொண்டிருந்தால் அவனுக்கு ஜால்ரா அடிப்பது, போலி மரியாதை கொடுப்பது, தன் சுயநல தேவையை கருத்தில்கொண்டு பழகுவது.
ஒருவன் இளிச்ச வயனாக இருந்தால் அவனது தேவைகளை பற்றி சிந்திக்காமல் அவனை தன் தேவைக்காக மட்டுமே பயன்படுத்திக்கொள்வது பயன் படுத்தியபிறகு தூக்கியெறிவது.
ஒருவர் மாற்று பாலினத்தவராகவோ அல்லது ஓரின செயற்கையாளராகவோ இருந்தால் அவர்களை குறித்து நகைப்பது, குத்திக்காட்டுவது, இழிவு செய்வது, வக்கிரமானவராக கருதுவது.
ஒருவர் தனிமை விரும்பியாகவும் மற்றவர்களைப்போல் இல்லாமலும் இருந்தால் அவரை பைத்தியமாக பாவிப்பது.
ஒருவர் நிறுவனமாக்கப்பட்ட நிறுவனங்களில் வேலைக்கு சென்று உழைப்பு சுரண்டலுக்கு அகப்பட்டு வாழ்நாள் முழுவதும் இயந்திரத்தனமாக சமுதாய, குடும்ப பாரங்களையெல்லாம் தூக்கிச்சுமக்க விரும்பாதவராக இருந்தால் அவரை கோழை என்றும், பிழைக்கத்தெரியதன், சுயநலவாதி என்றும் வசைபாடுவது.
மாமியார் மருமகள், கணவன் மனைவி, பெற்றோர் பிள்ளைகள், நட்பு, காதல் என்று எல்லா உறவுகளிலும் mindgame, manipulation, gaslighting, humiliating, sarcasm என்று நடந்துகொண்டே இருக்கிறது. இப்படி எதுவுமே இல்லாத குடும்பங்கள் சிலவே. அப்படிப்பட்ட குடும்பத்தில் ஒருவராக இருப்பது வரம்.
பெரும்பாலான குடும்பங்கள் dysfunctional குடும்பங்களே. இப்படிப்பட்ட dysfunctional குடும்பங்கள் சேர்ந்ததுதான் இந்த சமுதாயம், நாடு, உலகம். இப்படிப்பட்ட தற்குறி மந்தைகளின் சிந்தனைமுறையிலிருந்து விடுபடுவதே பெரும்பாடு.
மனிதர்களாகிய நாம் யார், எப்படி உருவானோம், நம்மை சுற்றி என்ன நடந்துகொண்டிருக்கிறது, நாம் என்ன செய்தோம், என்ன செய்துகொண்டிருக்கிறோம், என்ன செய்ய போகிறோம், வரலாறு, சமுதாய கட்டமைப்பு, அரசியல் கோட்பாடுகள், மதங்கள், பொருளாதாரம், உளவியல்... etc என்று நாம் எண்ணிப்பார்க்கவேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளது.
ஆனால் இவர்களோ ஏன் பிறந்தோம், என்ன செய்துகொண்டிருக்கிறோம், இந்த சமுதாய/பொருளாதார/அரசியல்/மத கட்டமைப்புகள் ஏன், எப்படி உருவானது இவற்றின் நிறை குறைகள் என்ன, அர்த்தமற்ற சடங்கு சம்பிரதாயங்கள் ஏன் பின்பற்றிக்கொண்டிருக்கிறோம், என்னமாதிரியான அரசியல் நடந்துகொண்டிருக்கிறது, என்னமாதிரியான பொருளாதாரம் செயல்படுகிறது, நம்முடைய உறவு சிக்கல்களுக்கு காரணம் என்ன, நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம், நம்முடைய பொறாமை, ஆணவம், வலி, ஏக்கம், mindgame, manipulation, gaslighting, humiliating, sarcasm, பொருளாதார/ஆடம்பர வேட்கை போன்ற வற்றிற்கெல்லாம் காரணம் என்ன என்றெல்லாம் சிந்திப்பதே இல்லை. தற்குறி மந்தைகளாகவே வாழ்ந்து தற்குறி மந்தையாகவே மடிந்துவிடுகிறார்கள்.
(தற்குறி எனும் சொல்லை; விழிப்பற்றவர்கள், முட்டாள்கள், நச்சுகள் எனும் பொருளில் குறிப்பிட்டிருக்கிறேன்)
- தீயவன்
No comments:
Post a Comment