Breaking

Sunday, June 23, 2024

உள்முக சிந்தனையும் படைப்பாற்றலும்



        உள்முக சிந்தனையும் (மனித) படைப்பாற்றலும் பிரிக்கமுடியாதவை. Creativity என்பதே உள்முக/அக சிந்தனை செயல்பாட்டின் வெளிப்பாடுதான். இன்னும் சொல்லப்போனால் சிந்திப்பதென்பதே அக செயல்பாடுதான். 


ஆனால், சிந்தனையும் புற உலகமும் வேறு வேறு அல்லது தனித்தனி செயல்பாடுகள் என்பதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனென்றால், சிந்தனையானது புற உலகின்  பிரதிபலிப்பு. பிரதிபளிப்பென்பது அப்படியே பிரதிபலிப்பது என்பதல்ல. புறஉலகம், அனுபவம் போன்றவைகள் கலந்து வேறொன்றாகவும் - வேறு வடிவமாகவும் பிரதிபலிப்பது. இந்த மாற்றங்கள் - பிரதிபலிப்புகள் உள்முகமாக நிகழ்வதால் இதை உள்முக செயல்பாடாக கொள்ளலாம். இந்த செயல்பாடுகளே கலை, இலக்கியம், மொழி, தத்துவம், அரசியல், விஞ்ஞானம்., போன்றவற்றின் தோற்றமாகவும் இருக்கிறது. 


Hans Jürgen Eysenck எனும் உளவியலாளர் கூறுகிறார் "Introversion and creativity go hand in hand " அதாவது, அகநோக்கு மற்றும் படைப்பாற்றல் ஆகியவை கைகோர்த்துச் செல்கின்றன என்று. 


அகசிந்தனையும் தனிமையும் சிறந்த படைப்புக்களை உருவாக்க வழிவகுக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. 


- தீயவன் 




No comments:

Post a Comment