தென்னிந்திய கோயில்களில் காணப்படும் யாளி சிற்பங்கள் தென்னிந்தியாவில் மட்டுமே காணப்படக்கூடியது, சங்ககால தமிழ் இலக்கியங்களிருந்துதான் பிற்காலத்தில் சிற்பங்களாக வடிக்கப்பட்டது, பண்டைய காலத்தில் தமிழ் நிலப்பகுதியில் இவ்விலங்கு வாழ்ந்திருக்கக்கூடும், கற்பனையோ நிஜமோ சீனர்களுக்கு டிராகன் எப்படி அடையாளமாக இருக்கிறதோ அதுபோல யாளி என்பது தமிழர்களுக்கு அடையாளம் என்றெல்லாம் கூறப்படுகிறது. இக்கூற்றுகளெல்லாம் உண்மைதானா? தமிழ் இலக்கியங்களிலிருந்துதான் யாளி சிற்பங்கள் உருவாக்கப்பட்டதா? தென்னிந்தியாவைத் தவிர வேறெங்கும் இல்லையா? உண்மையில் எதிலிருந்து, எப்போது யாளி சிற்பங்கள் தோற்றம் பெற்றது? என்பதுபோன்ற கேள்விகளுக்கான விடைகளை அளிக்க இச்சிறு நூல் (யாளி சிற்பக்கலையின் தோற்றமும் பரவலும்) முயற்சித்துள்ளது. நூலின் முடிவில் திராவிட கட்டிடக்கலை மற்றும் தமிழ் இலக்கியங்களுக்கு முன்பே யாளியானது வேறு கலைகளில் தோற்றம்பெற்றுவிட்டதை அறிந்துகொள்ளலாம்.
Amazon Kindle'ல் படிப்பதற்கு: யாளி சிற்பக்கலையின் தோற்றமும் பரவலும் by தீயவன் டேவிட்
No comments:
Post a Comment