Sunday, April 2, 2023

உழைப்பை புனிதப்படுத்துவது போதும்



கடினமாக உழையுங்கள், வியர்வை சிந்தி உழையுங்கள், உழைப்பால் உயருங்கள் என்று தொழிலாளிகளின் புகைப்படங்களுடன் மே தினத்தன்று (மற்ற நாட்களிலும்) சிலர் Facebook'ல் Post போடுவார்கள்...


ஆனால், இந்த முதலாளித்துவ பொருளாதார சமுதாயத்தில் நீங்கள் என்னதான் உழைத்தாலும் உங்கள் உழைப்பின் பலன் என்னவோ இந்த முதலாளிகளுக்கு தான் சேரும் என்று இவர்கள் உணர்ந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.. (முதலாளித்துவ பொருளாதாரம் என்பதே ஏற்றத்தாழ்வை அடிப்படையாகக்கொண்டு இயங்குவதுதான்)



ஏழைகளே பாக்கியவான்கள் என்று மதம் சொல்வதற்கும் தொழிலாளிய் இருப்பதே உயர்வானது என்று உழைப்பை புனிப்படுத்தி சொல்வதற்கும் எந்த வேறுபாடும் இல்லை. மறைமுகமாக இரண்டும் ஒரே வேலையைதான் செய்கிறாது. சுரண்டலுக்கு அடிபணியும் வேலையைதான் செய்கிறது.


அதற்காக உழைப்பு தவறு என்று சொல்லவில்லை. மனிதன் என்பவன் குரங்கிலிருந்து பரிணமித்தவன் என்கிறது டார்வின் கோட்பாடு. அப்படி மனிதகுரங்கிலிருந்து நவீன நாகரிக மனிதன் உருவாக அடிப்படையாக அமைந்தது உழைப்புதான் என்று அறிவியல் பூர்வமாக விளக்குகிறது மார்க்சியம். எனவே உழைப்பு தான் மனிதனை மேம்படுத்தி வந்துள்ளது என்றாலும் உழைப்பு தான் சுரண்டல் கருவியாகவும் இருந்து வர்க்க முரண்பாடுகளை உண்டுபன்னியுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.


புராதன பொதுவுடமை சமுதாயத்திற்கு பிறகு ஆண்டான் அடிமை சமுதாயம் முதல் இன்றைய முதலாளி வர்க்கம் வரை உழைப்பு ஒரு சுரண்டல் கருவியாகவே இருந்துள்ளதை உணர்ந்து கொள்ளலாம்..


கம்யூனிச சித்தாந்தம் தீயாய் பரவ காரணமாக இருந்ததும் இந்த உழைப்பு சுரண்டலை எதிர்த்து தான்.


உழைப்பு சுரண்டலை எதிர்த்து போராடியதால் தான் உழைக்கும் நேரம் எட்டு மணி என்று குறைக்கப்பட்டு சில குறைந்தபட்ச உரிமைகள் கிடைத்தது... ஆனால் அத்தோடு நிருத்திக்கொண்டு உழைப்பாளர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருப்பதைவிட இன்னும் தொழிலாளி வர்க்கம் செய்யவேண்டிய பணிகள் உள்ளது..


இன்றைய இன்னல்களுக்கு காரணமான இந்த முதலாளித்துவ பொருளாதாரத்தை தகர்த்து அனைத்து மக்களுக்குமான சுரண்டலற்ற சோஷலிச பொருளாதாரத்தை நோக்கி நகரவேண்டும்..


அப்படி உருவாகும் சோஷலிச சமுதாயத்தில் உழைப்பை புனிதப்படுத்திக்கொள்ளுங்கள் அதில் ஒரு நியாயம் இருக்கும். 


(மே1 2021 அன்று முகநூலில் இட்ட பதிவு)

- தீயவன் 

No comments:

Post a Comment