Breaking

Saturday, March 25, 2023

வெற்றிகரமான வாழ்க்கை என்பது என்ன?



மனிதர்கள் எல்லோரும் successful life காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களையும் வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும் என்றெல்லாம் சொல்கிறார்கள். உண்மையில் successful life அல்லது life achievement என்பது என்ன?


சமுதாயத்தால் புகழப்படுவதா? பொருளாதாரத்தில் உயர்வதா? ஆடம்பர வாழ்க்கை வாழ்வதா? உயர் பதவிகளை அடைவதா? அதிகாரம் பெறுவதா? அல்லது தன் எண்ணத்தின்படி அது அறிவற்றதாயினும் அதன்படி தன் ஆசைகளுக்காய் மட்டும் வாழ்ந்து இறப்பதா? அல்லது ஏதாவது ஒரு குறிக்கோள் வகுத்து அல்லது கொள்கையை பிடித்து அதற்காய் வாழ்வதா?


பெரும்பான்மையான மக்கள் தங்களை ஏதோ ஒரு மதத்தவராக அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். அந்த மதங்கள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கான நோக்கத்தை (successful life/life achievement) கொண்டுள்ளதாக பிரகடனப்படுத்திக்கொள்கின்றன. ஒன்று மற்றொன்றுக்கு வேறுபட்டது. 


கிறிஸ்தவ வேதத்தின்படியான சரி தவறுகளை பின்பற்றி வாழ்பவர்க்கு மறுமை என்னும் நிஜ உலகம் அதாவது சொர்க்கலோகம் கிடைக்கும். அங்கு வாழ்பவர்களுக்கு மரணம் என்பதே இல்லை என்றென்றைக்கும் இறைவன் ஆட்சிசெய்யும் உலகில் துன்பமின்றி மகிழ்ச்சியோடு வாழலாம். அந்த இலக்கை அடைவதற்கான பயிற்சிக்களம் தான் இந்த பூமி. இங்கே தோற்பவர்களுக்கு நரகம், வெல்பவருக்கு சொர்கம் என்று சொல்கிறது.


இஸ்லாமியமும் கிட்டத்தட்ட அதே நோக்கத்தைதான் கொண்டுள்ளது ஆனால் அங்கே வழிகாட்டியாக இயேசு, இங்கே முகமதுவும், குர்ஆனும். குரானை பின்பற்றி வாழ்வது மட்டும்தான் வாழ்வின் வெற்றி - successful life/life achievement என்கிறது.


பௌத்தமோ, சொர்கம், நரகம், ஆன்மா, கடவுள் என்று எதுவும் இல்லை. துன்பமயமாய் இருக்கும் இந்த வாழ்க்கை தான் நரகம். துன்பத்திலிருந்து விடுதலை அடைவதற்கு நிர்வாண நிலை ( பற்றற்ற நிலை) அடையவேண்டும், தம்மம் எனும் ஒழுக்க நெறிகளை பின்பற்றவேண்டும். நிர்வாணம் அடைவதே வாழ்வின் வெற்றி என்பதாய் பௌத்தம் சொல்கிறது.


சமணத்தை எடுத்துக்கொண்டால், நாம் செய்யும் நன்மை, தீமைக்கேற்ப பல பிறவிகள் எடுத்துக்கொண்டே இருப்போம். சங்கிலி தொடர்போல. அப்பிறவி சுழற்சியிலிருந்து விடுபடுவது/ முக்தியடைவதே life achievement என்று அந்நிலை அடைவதற்கான வழிமுறைகளை வகுத்துள்ளது.


இன்னும் சில இந்திய சமையங்களோ, இந்த பிறவி சுழற்சியிலிருந்து விடுபடவேண்டும் என்றால் அது இறைவன் ஒருவனால் மட்டுமே முடியும் எனவே இறை பக்தியுடனும் வேதங்களையும், ஆகமங்களையும் பின்பற்றினாலே இறைவனடி/சொர்கம் சேரமுடியும்  அப்படி சேர்வதுதான் வாழ்வின் வெற்றி என்கிறது.


சென்ற நூற்றாண்டுக்கு முன்பு உருவான வள்ளலாரியமோ, இந்த உலகில் உள்ள அணைத்து உயிர்களும் வினை பயன் காரணமாக பல்வேறு உயிர்களாக பல பிறவிகளாக பிறவி எடுக்கின்றன. அந்த பிறவி சுழற்சியிலிருந்து விடுபடுவதே வாழ்வின் நோக்கம் என்கிறது. அதாவது பிறவி எடுக்காமல் இருக்கவேண்டும் என்றால் இறக்காமல் இருக்கவேண்டும். அந்த இறவா நிலையை சில வழிமுறைகளை பின்பற்றினால் அடைய முடியும். அந்நிலையை அடைவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை அல்லது வாழ்க்கை சாதனை என்று நம்புகிறது.


வெற்றிகரமான வாழ்க்கை என்பது இந்த உலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவிதமாக இருந்துவந்துள்ளது. சில எதார்த்தமானதாகவும், காலத்திற்கேற்றதாகவும் சில முட்டாள்தனங்களாகவும் இருந்துள்ளது. ஆனால் எதுவுமே எப்போதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவோ, எல்லோராலும் ஏற்றுக்கொள்ள கூடியதாகவோ இல்லை என்பதே உண்மை. 


சிலருக்கு நிம்மதியாக வாழ்வதே வெற்றிகரமான வாழ்க்கையாக இருக்கும். சிலருக்கு எல்லா செல்வ வளங்களோடு இருப்பது, சிலருக்கு அதிகாரம் பெற்றிருப்பது, சிலருக்கு தனக்கான கூட்டம் ஒன்றை வைத்துக்கொள்வது. சிலருக்கு கருணையுடன் இருப்பது, சிலருக்கு எதைப்பற்றியும் கவலையின்றி ஒழுங்கீனம் என்று சொல்லப்படுவதையெல்லாம் செய்துகொண்டு வாழ்வது, சிலருக்கு மிக ஒழுக்கத்துடன், கட்டுப்பாட்டுடன் வாழ்வது.... இவை அனைத்துமே வெவ்வேறானவைகள் அல்ல. ஒரே பாத்திரத்தில் உள்ளவை. இயற்கையின் முன்பு சரி தவறு ஒழுக்கம் ஒழுங்கீனம் என்று எதுவும் இல்லை. எதற்கும் வெகுமதியோ, தண்டனையோ இல்லை... எல்லாம் நாமே ஏற்படுத்திக்கொள்வது. 

 

ஆனால் இன்று ஒருவன் பள்ளிக்கு சென்று படித்து கல்லூரியில் பட்டம் பெற்று வேலைக்கு செல்ல வேண்டும். பிறகு திருமணம் செய்து பிள்ளைகள் பெற்று அவர்களை பள்ளிக்கு அனுப்பி கல்லூரி, திருமணம் என்று இந்த சக்கரம் சுற்றிக்கொண்டே இருப்பதை  successful life என்கிறார்கள். இதில் ஏதாவது ஒன்று தடைபட்டுவிட்டால் அவனை தோற்றவனாக பார்க்கும். உதாரணமாக கல்லூரிமுடித்து வேளைக்கு செல்லவில்லையென்றால், பொருளாதாரத்தில் உயரமுடியவில்லையென்றால், திருமணம் ஆகவில்லையென்றால், பிள்ளை பிறக்கவில்லை என்றால், சொந்த வீடு கட்டமுடியவில்லை என்றால், பள்ளியில்-கல்லூரியில் தேர்ச்சி பெறவில்லையென்றால் அவனை அவனே Unsuccessful life வாழ்வதாக நம்பும்படி இந்த சமூகம் இன்றைய காலத்தில் உள்ளது. இப்போது மதங்கள் சொல்லும் successful life ஐ விடவும் இவைகளே முதன்மையாக உள்ளது. எப்படியென்றால் மதத்திற்குள் இருந்துகொண்டே மதநெறிகளுக்கு முரணானவைகளையும் செய்யும் அளவுக்கு.


இந்த சமூகம் சொல்லும் successful life ஐ அடைவதற்கு இரண்டே option தான் உள்ளது ஒன்று உழைப்பை விற்று - உழைப்பு சுரண்டலுக்கு அடிபணிந்து - வாழ்வது மற்றொன்று உழைப்பை சுரண்டி வாழ்வது


இன்றைய முதலாளித்துவ பொருளாதார சமூகத்தின் காரணமாக நாம் ஏற்படுத்திய successful life/life achievement எல்லாம் வேறொரு பொருளாதார முறை ஏற்படும்போது காலத்தின் ஓட்டத்தில் காணாமல் போய்விடும். அன்றைக்கு வேறுவிதமான கருத்துக்களை தூக்கி சுமந்துகொண்டிருப்போம். 


- தீயவன்


No comments:

Post a Comment