இன்று திருவள்ளுவரை வைத்து பெரும் சர்ச்சையே நடந்துகொண்டிருக்கிறது. இது இன்று நேற்றல்ல திருக்குறள் வெளியானது முதலே பல பல கட்டுக்கதைகளும் ஆரம்பித்துவிட்டது. புத்தரை எப்படி ஒரு அவதார புருஷனாக சித்தரிக்க முயன்றார்களோ அதேபோல வள்ளுவனையும் ஒரு அவதாரமாக, சைவராக, வைணவராக மாற்றும் முயற்சியும் நடந்துகொண்டு வருகிறது. ஆனால் அவைகள் அப்பட்டமான கட்டுக்கதைகள்.
அப்படியென்றால் உண்மையில் திருவள்ளுவர் யார்? எந்த சமயம்? எங்கு பிறந்தார்? போன்ற கேள்விகளுக்கு திருக்குறள் உள்ளிட்ட சில ஓலைச்சுவடிகளை பாதுகாத்துவந்த கந்தப்பனாரின் பேரனான அயோத்திதாசர் பதில் தருகிறார். அவருக்கு எப்படி தெரியுமென்றால் அவரிடமிருந்த சில ஓலைச்சுவடி இலக்கியங்களை கொண்டு கூறியுள்ளார். அவைகள் - நல்லுரையார் எழுதிய பஞ்சரத்தினப்பா, விபூதி விளக்கம், கசகசவிளக்கம்,., என்று அந்த பட்டியல் நீள்கிறது.
எவ்வாறு அவர் அந்த ஓலைச்சுவடிகளையும், தரவுகளையும் பெற்றாரென்று தமிழன் இதழில் வெளியிட்டிருக்கிறார். அயோத்திதாசரின் இந்த ஆய்வை தொகுத்து "திருவள்ளுவர் யார்" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் நூலாசிரியர் கௌதம சென்னா. எனவே விளக்கமாக தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் அந்நூலை படித்து தெரிந்துகொள்ளலாம்.
ஆனால், இப்பதிவில் வள்ளுவர் யாரென்று அவரசுட்டிக்காட்டும் இலக்கிய மேற்கோள்கள், ஆதாரங்கள் இன்றி மிக சுருக்கமாக அதன் சாரத்தை மட்டும் பார்க்கப்போகிறோம்.
திருவள்ளுவரின் வரலாறு:
வள்ளுவர் அசோகர் வாழ்ந்த காலத்தை சார்ந்தவர். அன்று வடமதுரை என்று அழைக்கப்பட்ட இன்றைய திருவள்ளூர் பகுதியை ஆண்ட கச்சன் அல்லது கூர்வேல் வழுதி என்று அழைக்கப்பட்ட குறுநில அரசனுக்கும் உபகேசி எனும் அரசிக்கும் பிறந்த இளவரசனே திருவள்ளுவர். அவருக்கு பெற்றோர்கள் சூட்டிய இயற்பெயர் நாயனார்.
வள்ளுவநாயனார் சிற்றரசராக இருந்து பின் பெற்றோர்களின் சம்மதத்துடன் புத்த துறவியானார். இவர் இளம்வயதிலேயே பல மொழிகள் (தமிழ், பாலி,வடமொழி), பல நூல்கள் கற்றறிந்து. பல நாடுகளுக்கு பயணம் செய்து, பல விகாரங்களில் தங்கி திரிபீடகங்களையும் படித்திருக்கிறார். பிறகு தனது நாடு எல்லைக்குட்பட்ட இந்திர விகாரம் என்ற பௌத்த சங்கத்தில் இணைந்துகொள்கிறார். அக்கால கட்டத்தில்தான் திரிபீடகத்தை வழி நூலாக கொண்டு அறம், பொருள், இன்பம் எனும் முப்பாலினை கொண்ட திரிக்குறளை இயற்றியிருக்கிறார்.
அவர் வீரராகுல விஹாரில் சித்திரை மாதம் அமாவாசைக்கு அடுத்தநாள் நிர்வாண மெய்தினார். அந்த வீரராகுல விஹார் இன்று வீரராகுல பெருமாள் கோயிலாக வைணவர்களால் மாற்றப்பட்டுவிட்டது. இன்றும் அக்கோயிலில் சித்திரை மாத அம்மாவாசை ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
No comments:
Post a Comment