மாயா நாகரிகத்தின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் ஒரே காரணம்தான் அதுதான் "காடழிப்பு". மழைக்காடுகளை அழித்து உருவானதே மாயன்களின் நகர நாகரிகம். உலகிலுள்ள பல நாகரீகங்கள் காடழித்து உருவானவைதான். இன்றும்கூட காடழிப்பு தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. காடுகள்மட்டுமல்ல குளம், ஏறி, ஆறு என்று அனைத்து இயற்கை சூழல்களும் (ஆதாரங்கள்) நகரமயமாகிக்கொண்டிருக்கிறது என்பது கண்கூடு. இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஆரம்பமான காலகட்டமே நாகரிகம் என்று சொல்லப்படுகிறது
மாயன் நாகரிகத்தின் பெருமை என்று சொல்லப்படுபவைகளில் முதன்மையானவை அவர்களின் நுணுக்கமான நகரமைப்பு (கட்டிடக்கலை) , விவசாயம். அதற்கு அவர்கள் கொடுத்த விலை பெரும்பகுதிக்காடுகள். அவர்களின் கட்டிடங்கள், கோவில்கள் பொலிவுடன் காணப்படுவதற்கான காரணம் சுண்ணாம்பு கற்களை புதிதாக வெட்டப்பட்ட பச்சைமரங்ளை கொண்டு தீயிட்டு சூடுபடுத்தி அந்தக்கலவையை பயன்படுத்தியிருக்கிறார்கள்.அதாவது சராசரியாக ஒரு பெரிய கட்டிடதத்திற்கு 1000 ஏக்கர் நிலப்பரப்புக்கொண்ட பச்சைமரங்கள் தேவைப்படும் அப்படியென்றால் மாயன்கள் உருவாக்கிய மொத்த நரகரத்திற்கும் எவ்வளவு பெரிய காடு இறையாக்கப்பட்டிருக்கும்! இதுமட்டுமின்றி அவர்களின் விவசாயத்திற்காகவும் வரைமுறையின்றி காடுகளை அழைத்திருக்கிறார்கள். அங்கு வெட்டப்பட்டது மரங்கள்மட்டுமல்ல பல அறிய உயிரினங்களின் வாழ்வாதாரமும்தான்.
இவற்றையெல்லாம் (கட்டிடங்களை கட்டுவது, மரங்களை வெட்டுவது, விவசாய வேலைகள்) செய்து முடிப்பதற்கு எவ்வளவு அடிமைகள்,பழங்குடிகள் பயன்படுத்தப்பட்டிருப்பார்கள் என்பதையும் சிந்திக்கவேண்டும்.
பெரும்பகுதிக்காடுகள் அழிக்கப்பட்டதால் சுற்றுசூழல் மாற்றம் மண்வளம் பாதிப்பு (வறட்சி) என்று மனிதர்கள் வாழத்தகுதியற்ற இடமாக மாயன்களின் நகர நாகரிகம் வீழ்ச்சியை சந்தித்தது. இயற்கையை கொன்று உருவான நாகரிகத்திற்கு கிடைத்த இயற்கையின் பரிசு.
காடழித்து கட்டிடங்கள் உருவாக்கியது பற்றிய காணொளி: https://youtu.be/ cXydE4AV9TA
-தீயவன்
No comments:
Post a Comment