Breaking

Tuesday, September 3, 2019

காடழிப்பால் அழிந்த ஈஸ்டர் தீவு பழங்குடிகள்


ஈஸ்டர் தீவில் இரண்டு குழுக்கள் வசித்துவந்தார்கள்
1 . நீண்ட காது கொண்டவர்கள்
2 . சிறிய காது கொண்டவர்கள்
நீண்ட காது கொண்டவர்களே அத்தீவை ஆட்சிசெய்துவந்துள்ளார்கள். அவர்கள் தங்களை கடவுளின் குழந்தைகள் என்று அழைத்துக்கொண்டார்கள். மற்றவர்கள் அடிமையாக நடத்தப்பட்டனர். (இங்கேயும் ஆண்டான் அடிமை பிரச்னை)
அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களது உருவங்களை செதுக்க சொல்லி மற்றவர்களை கட்டளையிட்டார்கள். ஈஸ்டர் தீவு முழுக்க காணப்படும் சிலைகளை செதுக்கியவர்கள் சிறிய காதுடையவர்களே(அடிமைகள்). எனவே தான் இந்த சிலைகள் (மோவாய்கள்) நீண்ட காதுகளுடன் காணப்படுகிறது.
ஒன்றுக்கும் உதவாத இந்த சிலைகளுக்காகவே (சிலைகளை நகர்த்திச்செல்லவும், மற்ற தேவைகளுக்காகவும்) அத்தீவு முழுவதும் இருந்த வனப்பகுதி அழிக்கப்பட்டது. அணைத்து மரங்களும் அழிக்கப்பட்டதால் இயற்கை தன்னை மீளுருவாக்கம் செய்யமுடியாமல் போனது.
Artist:Unknown
நிலஅரிப்பு, மண்வளம் பாதிப்பு காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டு உணவு பஞ்சம் ஏற்பட்டது. மீன் பிடிக்கக்கூட கட்டுமரம் செய்ய மரம் இல்லை. இதனால் கோபத்தில் சிலை உடைப்பு மற்றும் இவர்களுக்குளாகவே சண்டைகள் என்று பலர் மடிந்தார்கள். பெருமளவு மக்கள் தொகை குறைந்தது.
Artist:Unknown
எஞ்சியவர்கள் பழைய வாழ்க்கைக்கு திரும்பும்போது, ஈஸ்டர் நாள் அன்று டச்சுக்காரர்கள் அத்தீவிற்கு வந்திறங்கினர். எஞ்சிய பழங்குடிகளை அவர்கள் அடிமை வணிகத்திற்காக பிடித்துசென்றுவிட்டார்கள். சிலவருடம் கழித்து சிலர் தப்பி மீண்டும் அத்தீவிற்கு வந்தார்கள் அவர்களின் மூலம் தொற்றுநோய், சின்னம்மை போன்ற நோய்கள் பரவி எஞ்சியவர்களும் பலியானார்கள். இதில் ஐரோப்பியர்கள் வருகையே எஞ்சிய ஈஸ்டர்த்தீவு பழங்குடிகள் வீழ்ச்சிக்கு காரணம் என்றாலும் அந்நிலைக்கு வித்திட்டது காடழிப்பும், ஒற்றுமையின்மையும் (ஆண்டான்,அடிமை) அதனால் ஏற்பட்ட மக்கள்தொகை குறைப்பும் காரணம் எனலாம்.

-தீயவன் 

No comments:

Post a Comment