Breaking

Wednesday, October 30, 2019

உலகப்போரும் நோபல் பரிசும் । ஓஷோ பார்வையில்


நோபல் பரிசு என்பது முதல் உலகப்போருக்கு அனைத்து வகையான அழிவுகரமான குண்டுகள், இயந்திரங்கள், உருவாக்கி அதன்மூலம் பணம் சம்பாதித்த மனிதனால் நிறுவப்பட்டது. முதல் உலகப்போர்  Mr. Nobel என்பவர் supplie செய்த ஆயுதங்கள் கொண்டு நடத்தப்பட்டது. மிகப்பெரிய அளவில் போர் ஆயுதங்களை தயாரித்த மனிதர் இவர். இரண்டு தரப்பினரும் போர் உபகரணங்களை வாங்கியது ஒரே இடத்தில்தான் அது இவரிடம்தான். இதன்மூலம் இவர் ஒரு பெரும் தொகையை சம்பாதித்தார்.

கொல்லப்பட்ட அனைவரும் இவரால் கொல்லப்பட்டனர்.
அவர் இந்தப்பக்கத்தை சேர்ந்தவரா அல்லது அந்தப்பக்கத்தை சேர்ந்தவரா என்பது முக்கியமல்ல கொல்லப்பட்டவர்கள் அனைவரும் இவர் குண்டுகளால் கொல்லப்பட்டனர்.

ஆகவே முதுமையில் ஒரு மனிதனிடம் இருக்கக்கூடிய உலகில் எல்லாப் பணமும் அவரிடம் இருந்தபோது அவர் நோபல் பரிசை நிறுவினார். இது  (peace award) அமைதி விருதாக போரினால் பணம் சம்பாதித்த ஒரு மனிதனால் வழங்கப்படுகிறது. அமைதிக்காக உழைக்கும் எவருக்கும் நோபல் பரிசு கிடைக்கிறது. இது சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகள், சிறந்த கலை, சிறந்த கண்டுபிடிப்புகளுக்காக வழங்கப்படுகிறது.

நோபல் பரிசுடன் பெரும் பணம் தரப்படுகிறது - தற்போதைக்கு ஏறத்தாழ இருநூற்று ஐம்பதாயிரம் டாலர்கள். சிறந்த award . இந்த தொகை மேலும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது, ஏனெனில் பணத்தின் மதிப்பு குறைந்துகொண்டே செல்வதால்.  இந்த நோபல் பரிசுகள் அனைத்தும்  ஒவ்வொரு ஆண்டும் வட்டிக்கு மட்டுமே விநியோகிக்கப்படுகின்றன.  அடிப்படை பணம் அப்படியே இருக்கும், அப்படியே, எப்போதும் அப்படியே. ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவு வட்டி குவிகிறது அதைக்கொண்டு நீங்கள் இருபது நோபல் பரிசுகள் கொடுக்க முடியும்.

அனைத்து தொண்டு வேலைகளும் உண்மையில் குற்றத்தை கழுவும் முயற்சியாகும்.

- ஓஷோ (Beyond Psychology, Ch #1)

No comments:

Post a Comment