Breaking

Saturday, May 11, 2019

தீயவனின் சிந்தனைத்துளிகள் | பாகம்1


நன்மையும் தீமையும்
உயர்வும் தாழ்வும்
அரசனும் அடிமையுமென்று
படிநிலையமைத்து - பின் இவை
கடவுள் கட்டமைப்பென்பான் காரிய மனிதன்
-தீயவன்

உனையறியா உன்நிழலாய் பின்தொடர்வதே அன்றி
மானிடமனதால் வரையறுக்கப்பட்டதன் பின்செல்வதல்ல ஒழுக்கம்
-தீயவன்

அங்கு
போட்டியில்லை, பொறாமையில்லை
உயர்வில்லை , தாழ்வில்லை
ஆசையில்லை, பற்றுமில்லை
ஆணவமம் இல்லை
ஏனெனில் அங்கு நானேயில்லை
வெறும் ம்வெறுமை மட்டுமே
இப்பிரபஞ்சத்தோடு கரைந்து
எல்லாமுமாயிருக்கும் வெறுமை - தனிமை
-தீயவன்

 

கண்முன்னேயிருக்கும் சொர்கத்தைமறந்து
இல்லாஒன்றில் நம்பிக்கைக்கொண்டு
கிடைத்தவாழ்வையும் தொலைத்து நரகவாழ்க்கை வாழ்ந்து - பின்
மடிவது மனிதக்கூட்டம் தானோ!
-தீயவன்

 

நீயோ தனிமையைக்கண்டு
சித்தங்கலங்கிப்  பித்துபிடித்துத்
தீயோனாவாயென்றஞ்சி ஓடுகிறாய்
ஆனால் நீ வழிபடும் உன்
சித்தனும்  புத்தனும் தேவனும்
தனிமைவிரும்பியென்றறிவாயோ?
-தீயவன்


No comments:

Post a Comment