Breaking

Wednesday, May 1, 2019

யோக்கியன் ராமன், ராமாயணம் | ஓஷோ பார்வையில் | பாகம் 1

சீதையை ராவணன் இலங்கைக்கு கடத்திச்சென்றுவிட்டான் 3  ஆண்டுகள் யுத்தம் தொடர்ந்தது மக்கள் அனைவரும் ராமன் தன் மனைவிக்காக போராடுகிறான். "என்ன ஒரு காதல்" என்று நினைத்தார்கள். ஆனால் அது அப்படியல்ல.

ராவணன் தோற்கடிக்கப்பட்டு சீதையை கொண்டுவந்தபிறகு ராமன் சொன்னான் : "கேள், நான் இந்த யுத்தத்தில் உனக்காக போராடவில்லை, என்னுடைய முன்னோர்களின் பெருமைக்காக தான் போராடினேன்"  நீ தீ பரிசோதனையை மேற்கொள்ளாத வரை என் இருப்பிடத்தில் உனக்கு அனுமதி இல்லை நெருப்பில் இறங்கி உயிருடன் வெளியில் வருவதுதான் ஒரே பரிசோதனை, நீ தூய்மையானவள் என்பதற்கு இந்த 3 ஆண்டு  சிறைவாசத்தில் எந்த உடலுறவும் ஏற்பட்டதில்லை என்பதை நிரூபிக்க.



நான் ஆச்சர்யப்பட்டேன்:  சீத்தா நெருப்பினுள் சென்றாள் என்றால்  ராமன் ஏன் செல்லவில்லை? அவனும் 3  ஆண்டுகள் தனியாகஇருந்தான் வேறுபெண்ணுடன் வசப்பட சாத்தியம் இருந்தது. அனால் இது ஆணாதிக்க சமூகம்.

சீதை நெருப்பை கடந்தால், தீ வெவ்வேறு மனிதர்களுக்காக தன் விதியை மாற்றிக்கொள்ளும் என்று நான் நினைக்கவில்லை , இது தூய புராணக்கதை தான்.  ஆனால் என் முக்கியத்துவம் என்னவென்றால் ராமனும் அதே பரிசோதனையை மேற்கொண்டிருக்கவேண்டும் ஒருவேளை அவன் நேர்மையானவனாக இருந்திருந்தால் கண்ணியமானவனாக இருந்திருந்தால். ராவணனுக்கு கீழ்ப்படியாமல் 3 ஆண்டு சிறைவாசம் இருந்து  கஷ்டப்பட்ட ஒரு பெண்ணிடம் இப்படி கேட்பது முற்றிலும் அசிங்கமான , மனிதாபிமானமற்றது.

முதல் பரிசோதனை முடிந்த பிறகும் அவள் நிராகரிக்கப்பட்டால்  (காட்டிற்குள் விரட்டப்பட்டால் ) ஒருவேளை ராமன் சீதையை உண்மையில் காதலித்திருந்தால் அவன்தான் இந்த உலகை துறந்திருக்க வேண்டும் அனால் இந்த உலகம், செல்வம், ராஜ்ஜியம் இவற்றை துறப்பதற்கு மாறாக எங்கு கொண்டுசெல்லப்படுகிறோம் என்று   தெரியாமல் இருக்கும் கர்பிணிப்பெண்ணை துறக்கிறார்  இதை பற்றின்மை (துறவு) என்று அழைக்கிறீர்களோ? இந்த மனிதன் ராஜ்யத்தில் மிகவும் பற்றுள்ளவன்

மற்றும் இந்த தலித்துகள், ஒடுக்கப்பட்ட பௌத்தர்களுக்கு ராமன் ஒரு தீண்டத்தகாதவனை கொன்ற மனிதன் என்று தெரிந்திருக்கவில்லை. இந்துக்களால் சூத்திரர்கள் வேதங்களை கேட்பதற்கும், படிப்பதற்கும் அனுமதிக்கப்படவில்லை.  வேதங்களில் விலைமதிப்பற்றது என்னதான் இருக்கும் என்று மிகுந்த ஆர்வமுடைய ஒரு இளைஞன் சில பிராமணர்கள் சடங்கு செய்து ரிக்வேதத்தை ஓதிக்கொண்டிருக்கையில் புதரின்பின்புறம் மறைத்தபடி கேட்டுக்கொண்டிருந்தான். அவன் கேட்டுக்கொண்டிருப்பதை  கண்டு அரசனிடம் (ராமன்) கொண்டுவந்தனர்.

ராமன் : "நீங்கள் இவனுக்கு தண்டனை கொடுங்கள், இதுபோன்று மீண்டும் நடக்கக்கூடாது"

இவரை நீங்கள் ராம பகவான் என்று அழைக்கிறீர்கள்?

இவர் அந்த இளைனனுக்கு தண்டனை கொடுத்தார். சூடான் எரியும் திரவத்தை அவன் காதுகளில் ஊற்றினார்கள் ஏனெனில் அந்த காதுகள் தான் பிராமணர்களின் வேதவசனத்தை கேட்டது பிறகு அங்கு அவன் இறந்துவிட்டான். 

இவரை இன்னும் நீங்கள் ராம பகவான் என்று அழைக்கிறீர்களா?

 - ஓஷோ (Zen: The Mystery and the Poetry of the Beyond #5)

No comments:

Post a Comment