Breaking

Tuesday, June 4, 2019

யூதமும் - ஆரிய பிராமணமும் । இயேசுவும் புத்தரும்



*முன்குறிப்பு: இவைகள் வெறும் அனுமானங்களே

இக்கட்டுரையில் நாம் பார்க்கஇருப்பது ஆரிய-பிராமணமும் யூதமும் கொண்டுள்ள சில நம்பிக்கை சார்ந்த கூறுகளையும் அவற்றால் புத்தரும் இயேசுவும் எப்படி ஒன்றிணைகிறார்கள் என்பதை பற்றியும்தான்.

வெவ்வேறு காலத்தில் வாழ்ந்த புத்தரும் இயேசுவும் இணைய காரணமாக இருந்தது பலியிடுதல் தான். இவற்றைப்பற்றி பார்பதற்குமுன் சிலவற்றை கூறிக்கொள்கிறேன். அதாவது பிராமணர்கள் தான் யூதர்கள் என்ற நோக்கத்துடன் இக்கட்டுரை எழுதப்படவில்லை. மற்றும்  பலியிடுதலின் தோற்றம் பற்றியும் பார்க்கப்போவதில்லை. உலகம் முழுவதும் பலதரப்பட்ட மக்களால் பலவிதமாக பலியிடும் பழக்கம் இருந்துவருகிறது. பெருமளவு தமிழர்களாலும் பலியிடும் பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. எனவே அவற்றை பிறகு பார்ப்போம்.
யூதர்களிடம் பலியிடும் பழக்கமானது நோவா காலத்திலிருந்து கடைபிடிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. உருவமற்ற இறைவனை தொடர்புகொள்ள பலிபீடம் (நெருப்பு,பலி) முக்கிய பங்குவகிக்கிறது. இதனை விவிலியத்தில்- பழைய ஏற்பாடுகளில்- பெருமளவில் பேசப்பட்டிருக்கும். உருவமற்ற இறைவன் அவ்வபோது நெருப்பு வடிவில் தோன்றி மனிதர்களிடம் தொடர்புகொண்டதாகவும். பலிபீடத்தில் எரிக்கப்பட்டவை நேராக இறைவனிடம் செல்வதாகவும் நம்பப்படுகிறது,  யூதர்கள் தங்களுக்கென்று ஆலயங்களை கட்டத்தொடங்கிய பின்னர் அவர்களது ஆலயங்களில் முதலிடம் வகிப்பது பலிபீடம்தான்.

Credit: Unknown

இந்த பலிபீடத்தில் விலங்கு (ஆடு,மாடு,புரா.,) கொன்று அதன் ரத்தத்தை ஆலயத்திலோ, தங்கள் மெலோ, வீடுகளிலோ தெளிப்பதால் பரிசுத்தமடைகிறது என்று கருதுகிறார்கள். பின் அந்த விலங்கை பலிபீடத்தில் தீயிட்டு எரித்து இறைவனுக்கு படைக்கிறார்கள் .கிட்டத்தட்ட பிராமணர்களின் நம்பிக்கையும் இவ்வாறே இருப்பது ஆச்சரியம். இவற்றைப்பற்றி நெருப்புவழிபாடு எனும் முந்தைய கட்டுரைகளில் ஓரளவிற்கு புரிந்துகொள்ளும் படியாக பார்த்தோம்.

ஆனால் பிராமணர்கள் பலிகொடுப்பவர்கள் இல்லை என்று நினைத்திருப்போம் அது உண்மைதான் இப்போது உள்ள பிராமணர்கள் அப்படிசெய்வதில்லை. ஆனால் இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பு இருந்த ஆரிய பிராமணர்கள் யாகம் வளர்த்து விலங்குகளை பலியிட்டு வந்துள்ளனர். இதற்கு ஆதாரம் அவர்களது வேதங்களும், புராணங்களுமே. மேலும் அவர்கள் பலியிடப்பட்ட விலங்குகளை உண்டுமிருக்கிறார்கள்.

இவர்கள் ஆடு, மாடு, குதிரை போன்ற விலங்குகளை யாக குண்டத்தில் உயிருடனோ அல்லது கொன்றோ எரித்துவந்திருக்கிறார்கள். யூதர்களை போன்று அவற்றை இறைவனுக்கு படைதார்கள். யூதர்களின் பலிபீடமும் பிராமணர்களின் யாக குண்டமும், அவர்களது நம்பிக்கையும் ஓரளவிற்கு ஒற்றுமையாக காணப்படுகிறது .

இறைவனின் பெயரால் விலங்குகளை பலியிடும் இவர்களின் இந்த நம்பிக்கையை கலைக்க முயன்றவர்கள் இயேசுவும், புத்தரும்.  புத்தர் நேரடியாக பிராமணர்களின் இந்த செயல்களை கண்டித்து எதிர்த்து வந்தார். கொல்லாமை எனும் கோட்பாடு உருவாக இதுவும் ஒரு காரணமாக இருந்தது. ஆனால் இயேசு யூதர்களின்  இந்த செயலை நேரடியாக எதிர்க்காமல் மறைமுகமாக யுக்தியை கையாண்டார்.

தான் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு யூதர்களின் வழிபாடுகளில் சில மாற்றத்தை செய்தார். பலியிடப்பட்ட விலங்கின் ரத்தம் பாவங்கள் நீங்கி பரிசுத்தம் தருவதாக நம்பிக்கொண்டு பலியிடுதலை இறை வழிபாடாக கொண்ட யூதத்தின் நம்பிக்கையை நூதனமாக மாற்றியமைத்தார்.  அதுதான் திருவிருந்து எனும் "திருப்பலி". அப்பமும் திராட்சை ரசமும் இயேசுவின் உடலாகவும் இரத்தமாகவும் இருந்து பரிசுத்தப்படுத்தும் என்றும் இவற்றை மட்டும் என் நினைவாக பின்பற்றுங்கள் என்று சீடர்களிடம் கூறினார்.
Artist - Unknown
ஒருவன் விலங்குகளை பலியிடுவதாலோ அல்லது அப்பத்தையும் திராட்சை ரசத்தையும் உண்பதாலோ பரிசுத்தமாக்கப்படுவான் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் இயேசு செய்தது பல விலங்குகளை இறைவன்பெயரால் அடிக்கடி பலியிடுவதிலிருந்து நிறுத்துவதற்காக கடும் சட்டதிட்டங்களை கொண்டிருந்த யூத பழமைவாதிகளிடம் இப்படியான தந்திர யுக்தியை அவர் கையாண்டிருக்கக்கூடும். மேலும் அவர் யூதர்களிலிருந்து தனித்திருந்தார் பழமைவாதத்திற்கு முரணாக தென்பட்டார் கடுமையான சட்டங்களை கடைபிடித்தவர்கள் மத்தியில் அன்பை போதித்தார் இப்படியான செயல்களாலேயே சிலுவையிலரயப்பட்டார்.

இப்படியாக ஒரேவிதமான நம்பிக்கைகளை கொண்டிருந்த யூதமும் பிரமாணமும் புத்தராலும் இயேசுவாலும் மாற்றம் காண தொடங்கியது. இயேசுவை பின்பற்றியவர்கள் மட்டும் பலியிடுதலை விடுத்து திருப்பலியை கடைப்பிடித்தார்கள் (அதற்காக கிறிஸ்தவம் சிறப்பானது என்று நான் கூறவில்லை). யூதமதத்திலிருந்து உருவான கிறிஸ்துவத்தில் பலியிடுதல் தடைசெய்யப்பட்டுவிட்டது. ஆனாலும் கிறிஸ்தவர்கள் இயேசுவை இறைவனாக நம்புவதால்தான் அவர்சொன்ன கொல்லாமையை கடைபிடிக்கிறார்கள். இல்லையென்றால் இறைவன் பெயரில் மனிதர்களை கூட பலியிட தயங்கமாட்டார்கள் (அதையும் ஆபிரகாம் செய்யத்துணிந்தார் என்று அவர்களின் Bible-களில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதையும் காண்க) அவர்கள் இன்னும் ஆட்டுமந்தைகளாகத்தான் இருக்கிறார்கள். இறைவன் சொன்னதாக சொன்னால் தான் கேட்பார்கள் என்பதை இதன்மூலம் உணரலாம்.
மற்றும் இந்தியாவில் பிராமணர்கள் புத்தரை ஏற்றுக்கொண்டு கொல்லாமையை கடைபிடிக்கவில்லை மாறாக தன் அதிகார நலனுக்காக அதையொரு ஆயுதமாக மட்டுமே கடைபிடித்துவருகிறார்கள். 

©️தீயவன் டேவிட்

No comments:

Post a Comment