Breaking

Wednesday, April 17, 2019

அஹிம்சைவாதி காந்தியின் வன்முறைகள் | ஓஷோ பார்வையில் | பாகம் 2



மஹாத்மா காந்தி அஹிம்சையை போதித்தார் ஆனால் அவர் ஒருபோதும் அகிம்சைவாதியல்ல. அவர் போதித்தது ஒன்று ஆனால் வாழ்ந்தது முற்றிலும் வேறுவிதம். நான் சில உதாரணங்களை சொல்கிறேன் அப்போதுதான் நான் சொல்வதன் அர்த்தம் உங்களுக்கு புரியும்.

காந்தி Phoenix என்றழைக்கப்படும் ஒரு ஆசிரமத்தை தென் ஆப்பிரிக்காவில் கொண்டிருந்தார். அங்கு ஆசிரமத்தில் உள்ள மற்றவர்களின் கழிப்பறைகளை சுத்தம் செய்ய காந்தியின் மனைவி மீராபா தயாராக இல்லை என்ற எளிய காரணத்திற்க்காக அவர் தொடர்ச்சியாக சித்திரவதை செய்யப்பட்டார்.

இந்தியாவில் குறிபிட்ட சாதியினர், தீண்டத்தகாதவர்கள் மட்டுமே இதை செய்வார்கள். உயர்சாதியினர் இதுபோன்ற வேலைகளை செய்யமாட்டார்கள். காந்தியின் மனைவிக்கு இது கடினமாக இருந்தது நிராகரித்து விட்டார் - அவள் கற்பமுற்றிருந்தாள். நள்ளிரவில் காந்தி அவளை வீட்டைவிட்டு வெளியில் தள்ளிவிட்டு சொன்னார், "நீ செய்தது பாவம் என்று உணரும் வரை நான் உன்னை வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டேன்".

குளிர்நிறைந்த இரவில் கற்பினிபெண், அந்நாட்டில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளக்கூட எந்த மொழியையும் அறிந்திக்கவில்லை.  நீங்கள் இந்த செயலை அஹிம்சை என்ற நினைக்கிறீர்களா? என்னால் அதை அஹிம்சையாக பார்க்கமுடியவில்லை, அது தூயவன்முறை.

கழிப்பறைகளை சுத்தம் செய்வது சரிஎன்று காந்தி நினைத்திருந்தால் அதை அவர்தான் செய்ய வேண்டும். ஆனால் அவர் மனைவியை செய்யச்சொல்லி கட்டாயப்படுத்துவது தனிதமினித சுதந்திரத்தை மீறுவதாகும். இதுவும் வன்முறைதான்.

காந்திக்கு 5 மகன்கள். மூத்தவன் ஹரிதாஸ், காந்தியால் கல்விகற்க்க அனுமதிக்காததால் வீட்டை விட்ட ஒடியவன். காந்தி நவீன கல்விக்கு எதிரானவர். நவீன கல்வி குறிப்பாக -அறிவியல் - மக்களின் மதம், நபிக்கைகளை அழிப்பதாக அவர் நினைத்தார். அதனால் தன் பிள்ளைகளுக்கு கல்வியை போதிக்கவில்லை.

ஹரிதாஸ் நிறைய விஷயங்களை அறிந்துகொள்ள ஆர்வமாக இருந்தான். கல்வியாலனாக ஆக விரும்பினான். இதில் எந்த தவரும் நான் பார்க்கவில்லை. சொல்லப்போனால் காந்தி அறிந்தவை எல்லாம் கல்வியின் மூலமே, இங்கிலாந்தில் கல்விகற்றார் பிரிடிஷ் கல்வி அவரை அழிக்கவில்லை, அவர் மதத்தன்மையை அழிக்கவில்லை என்றால் தன் மகன் மட்டும் அழிந்துவிடுவான் என்று ஏன் பயப்படவேண்டும்?

ஆனால் அதற்கு அவர் மிகுந்த எதிப்பாக இருந்தார். இது ஒரு கட்டத்தில் உச்சமடைந்தது, அவர் ஹரிதாசிடம் சொன்னார் : "கல்விகற்க வேண்டும் என்று கேட்பதை நிருத்தலாம் அல்லது வெளியே போலாம், பிறகு இது உன்னுடைய வீடு இல்லை "

ஹரிதாஸ் தைரியமான குழந்தையாக இருக்க வேண்டும், அவன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டான். நீங்கள் இதை அஹிம்சை என்று நினைக்கிறீர்களா? வன்முறை என்பது மக்களை கொலை செய்வது மட்டுமல்ல, அது ஒரு மனப்பான்மை, அணுகுமுறை.

காந்தி தன் மகனுக்கு தன்னுடைய சித்தாந்தத்தை திணிக்க முயன்றார் இது ஒருபோதும் அஹிம்சை அல்ல.

சிறு குழந்தையிடம் - தன் சித்தாந்தத்தை ஏற்றுக்கொள் அல்லது வீட்டை விட்டு வெளியே போ திரும்பி வராதே என்று சொல்வது கடினமான, கண்டிப்பான, அசிங்கமான ஒன்றாக தெறிகிறது.

ஹரிதாஸ் கோரிக்கையை புரிந்த தூரத்து சொந்தக்காரர் வீட்டில் தங்கி அவர்மூலம் கல்வியாலன் ஆனான். சொல்லப்போனால், காந்தி தவரானவர் என்று ஹரிதாஸ் தன்னை நிரூபித்து விட்டான். மதத்தன்மை, நம்பிக்கை ஆகியவற்றை இழக்காமல் கல்வியைலனாக மாறினான். காந்தி அகிம்சைவாதியாக இருந்திருந்தால் ஹரிதாஸிடம் மன்னிப்பு கேட்டு வீட்டிற்க்கு அழைத்திருக்க வேண்டும். ஏனெனில் அவன் சிறப்பாக நிரூபித்து விட்டான் நீங்கள் தவறு என்று, ஆனால் மாறாக அவர் கோபமாக இருந்தார் பழி வாங்கும் வகையில் அவனை துரத்திவிட்டார்.

காந்தி சொன்னார் இந்துமதம், முகமதியம், கிறித்துவம் ஆகிய அனைத்தும் ஒரே மாதிரியானது என்று. உலகில் உள்ள எல்லா மதங்களும் ஒரே கொள்கை, இறைவனை போதிக்கிறது அவர்கள் மொழி மாறுபட்டிருக்கலாம் ஆனால் அதன் சாராம்சம் மாறுபட்டதில்லை என்று. யாராவது காந்தியை படித்தால் நினைப்பார்கள் காந்தி அனைத்து மதங்களுக்கும் ஒரு பெயரி தொகுப்பு என்று. ஆனால் அது உண்மை இல்லை. இதுஒரு தத்துவஞானம் அல்லா ஆனால் அரசியல் யுக்தி.

இந்தியாவில் பெரும்பான்மை மதம் இந்து இரண்டாவது முகமதியம் மூன்றாவது கிற்த்துவம். காந்தி இந்த மூன்று மதங்களையும் பிரிடிஷ் அரசுக்கு எதிரான தனது போராட்டத்தை பின்தொடர்வதற்க்காக விரும்பினார். இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று மதரீதியாக முரண்படாமல் இருந்தால் மட்டுமே இது சத்தியமாகும் எனவே இது ஒரு அரசியல் யுக்தி.

இதை ஹரிதாஸ் சிறப்பாக நிரூபித்துவிட்டான். எப்போது அவன் காந்தியால் துரத்தப்பட்டு, கைவிடப்பட்டானோ அப்போது முகமதியத்திற்கு மாறிவிட்டான். காந்திக்கு கடும் கோபம், முதலில் அவனை துரத்திவிட்டு நீ என் மகனே இல்லை என்று சொன்ன பிறகு ஏன் கோபப்பட வேண்டும்? பாதையை தேர்ந்தைடுப்பது அவரவர் சுதந்திரம்.

காந்தி தன் மனைவியிடம் சொன்னார் நான் அவன் முகத்தை இனி என் வாழ்நாளில் பார்க்க மாட்டேன். நான் இறந்த பிறகு அவன் எனக்கு கொல்லி வைக்க அனுமதிக்காதீர்கள் என்று தன் மனைவி, நன்பர்கள், followers களிடம் சொன்னார். நிச்சையம் அவர் மனம் முழுவதும் வெறுப்பு நிறைந்திருந்தது.

ஒரு முறை இது நிகழ்ந்தது: காந்தியும், ஹரிதாசும் வெவ்வேறு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். இரண்டு ரயிலும் katni junction -ல் மூன்றாவது ரயில் மற்றொரு திசையிலருந்து வருவதற்க்கு காந்திருந்தது.

அப்போது ஹரிதாஸ் தன் தாய், தன் தந்தையை காண நேர்ந்து. அவர்களை காண விரைந்து அருகில் வரும்போது காந்தி door, windows மூடிவிட்டர். தன் மகனை பார்க்க அழுதுகொண்டிருந்த தன் மனைவியிடம் சொன்னர் "நீ அவனை பார்க்க வேண்டும் என்றால் அவனுடனே சென்றுவிடு, அவனை கைவிட்டது போல் உன்னையும் கைவிட்டு விடுகிறேன்".

Door, window மூடபட்டது compartment கு வெளியே ஹரிதாஸ் நின்று கொண்டிருக்கிறான். கஸ்தூரிபா அழகிறாள் அவன் முகத்தை பார்ப்பதற்க்குகூட அவளை அனுமதிக்கவில்லை.

இதை அஹிம்சை,இரக்கம், அன்பு என்று நினைக்கிறீர்களா?

- ஓஷோ (death to deathlessness, #15)

தொடரும்......
[காந்தியின் வன்முறையான மறுமுகத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்த இக்கட்டுரையின் நோக்கமே தவிர, ஹரிலால் மோகன்தாஸ் - ஐ சிறந்தவராக சித்தரிப்பதற்க்கல்ல. காந்தியின் குணத்தால் இவரும் சில தவறான செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார் என்ற கருத்தும் நிலவுகிறது.]

No comments:

Post a Comment