Breaking

Monday, February 25, 2019

நிலவுடமை வணிகநாகரிகம் பாகம் 2 | காடழிப்பு இதிகாசக்கதை

நாம் நம்பிக்கொண்டும், புகழ்பாடிக்கொண்டும் இருக்கும் இந்த பேரரசுகள் தங்கள் பொருளாதாரத்தை பெருக்குவதற்க்காக 2,000 ஆண்டுகளுக்கு மேலாக பல மனிதநேயமற்ற செயல்களை செய்துவந்துள்ளது. அவற்றுள் முதன்மையானது பெருங்காடுகளை அழித்ததுதான். இப்படியான செயல்களால் பல உயரினவகைகள் அழிந்தும், சுற்று சூழல் பாதிப்படைந்தது மட்டுமள்ளாமல் மனித வரலாற்றையே மாற்றியமைத்துவிட்டது.

சுதந்திரமாக இயற்கையுடன் இயைந்து வாழ்ந்துவந்த பழங்குடிகளை காட்டைவிட்டு விரட்டியும், காடுகளை திருத்தி நிலங்கள் ஆக்க அவர்களையே அடிமைபோல் பயன்படுத்திக்கொண்டது இந்த நிலவுடமை வணிக அரசுகள்.

இப்படிபட்ட நிகழ்வுகள் உலகம் முழுவதும் இன்றளவும் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இன்றைய நவீன நாகரிக காலத்தில் காடுகள் அழிக்கப்படுவது விளைச்சல் நிலங்களை பெருக் அல்ல, காட்டின் வளங்களளை கொள்ளையடித்து பொருளாதாரத்தை பெருக்க, மிச்சமிருக்கும் காடுகளும் அழிக்கப்பட்டு வருகிறது.

சில தினங்களு முன்புகூட உச்சநீதிமன்றம் "11 லட்சம் பழங்குடிகள் காட்டைவிட்டு வெளியேர வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளது. இதில் வியப்படைய ஒன்றுமில்லை. ஏனெனில், இவர்களின் வேதங்கள் (புராண இதிகாசம்) கூட பெருங்காடுகளை எரித்து பழங்குடிகளை கொன்றவர்களை தான் Hero 'களாக சித்தரிக்கிறது.

இந்த (மகாபாரத) கதையை சுருக்கமாக பார்ப்போம் :

அத்தினாபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த மன்னர் குரு என்பவரின் வழித்தோன்றல்களுள் வந்தவர்கள் தான் "பாண்டவர்கள்" இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாகப்பிரிவினை சொத்து தான் "காண்டவப்பிரஸ்தம்" என்ற பெருங்காடு.

இந்தக் காட்டில் பல வகையான பறவைகள், மிருகங்கள் வாழ்ந்திருந்தன மேலும் நாகர்கள், அரக்கர்கள் என பலரும் இருந்த மிகப்பெரிய வனப்பகுதியாம்.



"இந்திரப்பிரஸ்தம்" எனும் நகரை உருவாக்க பாண்டவரான அர்ஜூனன், கிருஷ்ணனின் துணையுடன் இந்த காட்டை அழித்து நகராக்கிறான்.

அந்நேரத்தில் நாகர்களின் தலைவன் "தட்சகன்" குருசேத்திரம் எனும் இடத்திற்க்கு சென்றிருந்ததான் இதனால் அவன் குடும்பமே அழிகிறது அவன் மகன் "அஸ்வனேன் " மட்டும் உயிர் பிழைக்கிறான். தன் நாகர் இனங்களைக் கொன்ற அர்ஜூனனை பழிவாங்க கர்ணனுடன் நப்பு கொள்கிறான். பின் "குருசேத்திர போரில்" அர்ஜூனனை கொள்ள கழுத்தில் குறிவைத்து நாகாஸ்திரத்தை  ஏவினான் கர்ணன், ஆனால் கிருஷ்ணனின் உதவியால் அர்ஜுனன் காப்பாற்றப்படுகிறான்.  பிறகு கிருஷ்ணன் வழிகாட்டல் படி அஸ்வசேனனையும், கர்ணனையும் அர்ஜூனன் கொன்று விடுவான்.


இப்படியாகச் சொல்லப்படும் இந்த கதையில் யார் வில்லன்?

ஆட்சியை பிடிப்பதற்காக வஞ்சகம், துரோகம், சூழ்சி செய்து சகோதரர்களளையே கொன்று, பல உயர்களை காவு வாங்கி நகரங்களை அமைக்கும் இந்த காட்டுமிராண்டிகள் தான் இந்த கதையின் Hero'களாம்.

இதை வேதமாகக் கொண்ட பாரதத்தில் நீதி என்பது சநாதன தர்மத்தின் படி தான் இருக்கும். இதைதான் உச்சநீதிமன்ற உத்தரவும் (காடுகளை விட்டு பழங்குடிகள் வெளியேற வேண்டும் ) வெளிபடுத்துகிறது.

- தீயவன் டேவிட்

No comments:

Post a Comment