முந்தைய பதிவில் (நெருப்பு வழிபாடு பாகம் 1) நெருப்பை இறைவனாக வழிபடும் 2 மதங்களான இந்துமதம் மற்றும் சொராட்ரியம் ஆகியவை Indo-Europeans களின் நம்பிக்கை சார்ந்த மதங்கள் என்று எழதியிருந்தேன், பலர் இதை வேடிக்கையாக நினைத்திருப்பார்கள் எனவே அவர்களுக்கு புரியும்படி சற்று விரிவாக கூறுகிறேன்.
இந்தியாவை பெருத்தவரை indo-aryans உருவாக்கிய வைதிக மதம் தான் மக்களிடையே நெருப்பு (தீ) வழிபாட்டை பரப்பியது.
இந்துமதம் என்பது உருவ வழிபாட்டை கொண்டது தானே?? என்று நீங்கள் கேட்களால்.
உண்மையில், ஆரிய-பார்பனர்கள் நெருப்பு வழிபாடைதான் முறையான வைதிக தெய்வ வணக்கமாக கொண்டிருந்தார்கள், பறகுதான் ஆகமங்கள் செய்து உருவ வழிபாடாகிய கோயில் வழிபாடிர்க்கு விதிகளை வரையறுத்தனர். இருப்பினும் இன்றலவும் இந்து மதத்தில் நெருப்பு வழிபாடிற்க்கு முக்கிய பங்கு இருப்பதை அவர்களது வழிபாடுகளில் காணலாம்.
இந்த ஆரியர்களுக்கும் ஈரானியர்களுக்கும் சமீபகாலம் வரை உள்ள நெருக்கத்தை பார்ப்போம்,
Ateshga of Baku |
ஈரானின் வடக்கு பகுதியில் உள்ள Azerbijan என்ற நாட்டில் Baku (பகு) என்ற இடத்தில் Zoroastrian களின் நெருப்பு கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலில் சமஸ்கிருதம் மற்றும் பாரசீக மொழிகளில் ஈசனையும், பிள்ளையார் மற்றும் தீயையும் போற்றும் இரண்டு கல்வெட்டுகள் உள்ளது.
இவை கி.பி 17, 18 நூற்றாண்டில் பொறிக்கப்பட்டாலும் இக்கோயில் கட்டுவதற்க்கு முன்பிருந்தே இங்கு தீவழிபாடு நிகழ்ந்துள்ளது. மற்றும் இந்தியாவிற்க்கும் இப்பகுதிக்கும் உள்ள வணிக பாதையின் மூலம் 10ம் நூற்றிற்க்கு முன்பிருந்தே நெருங்கிய தொடர்ப்பு இருந்துள்ளது.
இந்த இடத்தின் பெயரான Baku (பகு) என்பது கூட "அக்கினி பகவானை " குறிப்பது தான் பாரசீகத்தில் "அத்சி பகுவான்" என்பார்கள்.
இந்த பகுதியில் இயற்கையாகவே எரிவாயுக்கள் நிரம்பி இருந்ததால் தானாக நெருப்பு பற்றி எரியும், இந்த நெருப்பை இறைவனாக அம்மக்கள் வழிபட்டு வந்தனர் இதன் மூலமே நெருப்பு வணக்கம் என்பது இங்கு தோன்றியிருக்கலாம், பிறகு உருவான Zoroastrianism மதத்திலும் இந்த நெருப்பு வழிபாடு தொடர்கிறது.
இந்த நிகழ்விற்க்கும் திருவண்ணாமலை தீபத்திற்க்கும் கூட தொடர்பு உண்டு.
புராணங்களின் படி இங்கு ஈசன் ஜோதி (நெருப்பு ) வடிவில் தோன்றினான் என்பது போன்ற பல கதைகள் கூறப்பட்டாலும் இந்த பகுதி ஒரு காலத்தில் தானாக நெருப்பு எரியும் இடமாக இருந்தது என்றும் கூறப்படுகிறது.
எப்படி இருந்தாலும் இந்த திருவண்னாமலை தீபமும் ஈரானியர்களின் நம்பிக்கையை தான் வெளிபடுத்துகிறது.
தொடரும்...
*குறிப்பு: இவைகள் வெறும் அனுமானங்களே
- தீயவன்
No comments:
Post a Comment