Breaking

Thursday, July 19, 2018

புத்தரை விழுங்கிய இந்து மதம் | புத்த அவதாரம் | ஓஷோ பார்வையில்

இந்துமதத்திற்க்கு எதிராக செயல்பட்ட புரட்சியாலர் புத்தரை எப்படி இந்த ஆரிய  பிராமணர்கள்  தங்களுக்கு சாதகமாக, தங்கள் மதத்திற்குள் புத்தரை சேர்த்துக் கொண்டனர்?,. தங்கள் கடவுளின் அவதாரமாக மாற்றியது எப்படி? அதன் உள்நோக்கம் என்ன? என்பதை பற்றி ஓஷோ கூறியவற்றை தான் நாம் பார்க்கவிருக்கிறோம்.

ஓஷோ கூறியதாவது:

புத்தரை புரிந்து கொள்வது ஓர் இந்துவிற்க்கு மிகக் கடினம். அந்த பெயரை கேட்டவுடனேயே எதிர்ப்பு தோன்றிவிடும். ஏனெனில் அவர் (புத்தர்) கூறிய விஷயங்கள் 'வேதங்களுக்கு' எதிரானவை. 'பிராமணர்களுக்கு' எதிரானவற்றை அவர் கூறினார். அவர் கூறியது "மனுநீதிக்கு" எதிர்பதமானவை.

அவர் கூறியது மட்டுமல்லாமல் ஒரு புதிய சமுதாயத்தை உருவக்கத் தொடங்கினார். ஓர் "இந்து அல்லாத சமுதாயம்" அவரால் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் சிருஷ்டித்த ஓர் உலகில் சூத்திரன், தீண்டத்தகாதவன், பிராமணன், குருக்கள் என இவர்களுக்கு எவ்வித வேறுபாடும் இல்லை.

அவர் 'சாதிகளற்ற உலகை' உருவாக்கினார். அதில் யாரும் தாழ்ந்தவர் அல்ல யாரும் உயர்ந்தவர்களும் அன்று. முற்றிலும் புதிய ஒரு சமுதாயத்திற்க்கு அவர் அடித்தளம் போடத் தொடங்கினார். இந்துக்கள் கோபம் கொண்டனர், புத்த மதத்தை அவர்கள் அழித்து விட்டனர். இந்தியாவில் புத்தமதம் இல்லை என்பது உனக்கு தெறியுமா? இங்கு கிட்டத்தட்ட புத்தர் ஒரு அயல் நாட்டவர். சீனாவில், திபெத்தில், ஜப்பானில், இலங்கையில், தாய்லாந்தில் அவர் நேசிக்கப்படுகிறார். இந்தியாவைத் தவிற ஆசியா முழுவதும் புத்த மதத்தைச் சேர்ந்தவை.

இந்தியாவில் அவர் பிறந்தார் ஆனால் இங்கு அவர் இல்லவே இல்லை, என்ன ஆயிற்று?

இந்துக்கள் பழி தீர்த்துக்கொண்டனர், அவர்கள் அழித்து விட்டனர். இயேசுவை யூதர்கள் அழித்ததை விட, இவர்கள் புத்தரை அழித்த முறை மிகவும் கெட்டிக்காரத் தனமானது. ஏனெனில் இந்துக்கள் கெட்டிக்காரர்கள் அவர்கள் புத்தரை கொல்லவில்லை, ஆனால் புத்த மதத்தைக் கொன்றுவிட்டனர்.

அவர்கள், புத்தரை இறைவனின் ஓர் அவதாரமாக ஏற்றுக் கொண்டுவிட்டனர். எப்படி இதை முழுவதையும் தமக்குச் சாதகமாக பயன்படும்படி செய்தார்கள் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.

அவர்கள் புத்தருக்கெதிராக, அவரது கருத்துகளுக்கெதிராக, அவரது புரட்சிக்கு எதிராக இருந்தனர் ஆனால் புத்தரை ஆண்டவனின் ஓர் அவதாரமாக ஏற்றுக் கொண்டு விட்டனர்.

விஷ்ணுவின் ஒன்பதாவது அவாரமாக புத்தரை சித்தரிக்கும் படம்


ராமர் ஓர் அவதாரமாக இருப்பது போல், கிருஷ்ணர் ஓர் அவதாரமாக இருப்பது போல் புத்தரும் கூட ஓர் அவதாரமாகிவிட்டார். ஆனால் அதில் அவர்கள் ஒரு தந்திரம் செய்துவிட்டனர்.


கதை என்னவெனில்....

இந்துக்களுடைய கதை: ஆண்டவன் உலகை படைத்தார். சொர்க்கம் நரகத்தையும் படைத்தார் பல லட்சம் ஆண்டுகள் கழிந்துவிட்டன. யாருமே நரகத்திற்க்குச் செல்லவில்லை. ஏனெனில் யாருமே பாபம் செய்யவில்லை மக்கள் மிகவும் தெய்வ நம்பிக்கை உடையவராய், எளிமையாக, கள்ளங்கபடின்றி இருந்தனர். ஒவ்வொருவரும் இறந்தவுடன் நேராக சொர்கத்திற்க்கு சென்றுவிட்டனர்.

அப்படி என்றால் நரகத்தை நிர்வகிக்கும் சாத்தான், சாத்தானின் சீடர்கள், குட்டி சத்தான்கள், அவர்களது அரசாட்சி இவற்றின் கதி என்னாவது? அவர்கள் மிகுந்த களைப்பும், சலிப்பும் அடைந்துவிட்டனர். ஒருவர் கூட நுழையவில்லை தங்கள் அலுவலகத்தில் தங்கள் பதிவேடுகள், ஆணவங்கள் இவற்றுடன் வாயிலிலேயே அவர்கள் காத்துக் கிடந்தனர் யாரும் வரவே வரவில்லை.

அவர்கள் ஆண்டவனிடம் சென்று இது என்ன? இதனை முற்றிலுமாக மூடிவிடுங்கள். லட்சோபலட்ச வருடங்களாக யாருமே வருவதில்லை நாங்கள் அலுத்து, களைந்து, சலித்துப் போய்விட்டோம் மக்களை அனுப்புங்கள் எங்களுக்கு வேலை தாருங்கள் அல்லது இதனை மூடிவிடுங்கள் என்று மன்றாடினர்.

அவர்களது பிரச்சனை உண்மையானதுதான் என்று ஆண்டவன் அதனைக்குறித்து ஆலோசனை செய்து பார்த்து அவர்களிடம், கவலைப்படவேண்டாம் வெகு விரைவில் நான் "கெளதம புத்தராக" பிறப்பேன் மக்களது மனதைக் கெடுப்பேன் அவர்கள் நரகத்திற்க்கு வருவார்கள் என்று கூறினார்.

நோக்கத்தை பார்த்தாயா? "நான் மக்களின் மனதைக் கெட்டுப்பேன் அவர்கள் குழப்பமடைந்து விட்டால் நரகம் நிரம்பி வழியும்".

புத்தருக்கு பின்னர்தான் நரகம் ஜன நெருக்கடி அடைந்தது என இந்துக்கள் கூறினர். நரகத்தின் நிர்வாகத்திற்கு உதவிபுரிவே இறைவன் புத்தரின் வடிவெடுத்து வரவேண்டியதாயிற்று என்றும் கூறுவர்.

இரு விஷயங்களை அவர்கள் செய்துள்ளனர் ஒன்று புத்தரை ஆண்டவனின் அவதாரமாக ஏற்றுக் கொண்டுவிட்டனர். இரண்டாவது அவரது போதனைகளை ஒதுக்கித் தள்ளி விட்டனர்.

ஏனெனில் அந்த போதனைகள் கெடுப்பதற்காகவே ஏற்பட்டது அதாவது ஒரு பெளத்தனாதல் என்பதே 'கெட்டழிதல்' பௌத்தன் என்பதே நரகத்திற்குச் செல்வதற்கான ஒர் உத்திரவாதம்.

எனவே புத்தருக்கு மரியாதை செலுத்துங்கள் அவர் ஆண்டவனின் ஓர் அவதாரம் ஆனால் அவரது போதனைகளை போட்டுக் கொள்ளாதீர்கள் அவரை பின்பற்றாதீர் மிகவும் எச்சரிக்கையோடு இருங்கள் மிகுந்த கவனத்தோடு இருங்கள் என்று அலட்சியப்படுத்தினர்.  மகாவீரரிடமும் இம்மாதிரியே நடந்து கொண்டனர்.

- ஓஷோ (நான் உனக்குச் சொல்லுகிறேன் 1, அதிகாரம் 8)

6 comments:

  1. ஆதாரம் இருந்தால் நன்றாக இருக்கும்.அதுவரை தாங்கள் சொல்வதும் கட்டுக்கதையாகவே காட்சியளிக்கிறது

    ReplyDelete
    Replies
    1. தோழர், இது என்னுடைய சொந்த கருத்தல்ல,
      ஓஷோ அவர்கள் கூறிவை...

      அதற்கு ஆதாரம் "நான் உனக்குச் சொல்லுகிறேன்" என்ற புத்தகத்தில் 8 ஆம் அதிகாரத்தில் இருக்கிறது...

      Delete
  2. தயவு செய்து அயோத்திதாசபண்டிதர் பறையர் புத்தரைப்பற்றி எழுதிய வரலாறை படித்தால் நன்று

    ReplyDelete
    Replies
    1. July 22, 2018 at 9:18 PM
      நீங்கள் இந்த பதிவை மீண்டும் படிக்கவும்... உங்களுக்கு இந்த பதிவில் என்ன முறன் என்று குறிபிட்டு கூறவும்...

      அய்யோத்திதாசரும் சின்தனையும் இதுதான்...

      ஆதாரம் : ப. மருதநாயகம் எழுதிய "ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம் -அய்யோத்திதாசரின் சொல்லாடல் " என்ற புத்தகத்தில் பக்கம் 22-ல் உள்ளது. click to view https://drive.google.com/file/d/1CYQVarRAgqZnt5U4zSJxAacjx_B-lNdG/view?usp=sharing

      மேலும், நீங்கள் சுயசாதி பற்றாலர் போன்று தெரிகிறது , இந்த மனநிலைக்கு எதிரானவர்தான் புத்தர்..

      Delete
  3. “விஷ்ணு“ என்ற கடவுளின் நெற்றியில் மூக்கின் மேலே 'U' என்ற அடையாளம் இடப்பட்டுள்ளது. இது எதனை அடையாளப்படுத்தகிறது? விஷ்ணு தனது இடது கையில் சங்கினையும், வலது சுட்டு விரலால் வட்டச் சக்கரத்தையும் சுழற்றுகிறார். இவைகள் தனித்தனியாகவும், கூட்டாகவும் எவற்றினை அடையாளப்படுத்துகின்றன? இவற்றை எவராது ஆராய்ந்து கூறுவீர்களா? ”இந்துக்கள்” இவற்றிற்கான பதிலை கூறாவிடின், அவர்களது பேச்சு கற்பனையானது, பிழையானது!!

    ReplyDelete
  4. இந்து கடவுள்கள் எனக் கூறப்படும் அனைத்துக் கடவுள்களும் கையில் ஒலியெழுப்பும் ஒரு சாதனத்தினைக் காவுகின்றனரே? சிவன் உடுக்கினையும், விஷ்ணு சங்கினையும், முருகன் மணியினையும், கிருஷ்ணா புல்லாங்குழலையும், சரஸ்வதியும், இலக்குமியும் வீணையினையும் காவுகின்றனரே? அவை எவற்றை அடையாளப்படுத்துகின்றன? இதைவிட, இக்கடவுள்கள் வேறு சிவற்றையும் காவுகின்றன. அவைகள் எவற்றினை அடையாளப்படுத்துகின்றன?

    ReplyDelete