நிலவுடமை வணிக நாகரிகத்தின் அறுவடை கொண்டாட்டம்
அறுவடை விழா என்பது விவசாய நிலங்களில் கிடைத்த நல்ல விளைச்சலை கொண்டாடும் விழா என்று அனைவரும் அறிந்ததே.
அறுவடை விழா என்பது விவசாய நிலங்களில் கிடைத்த நல்ல விளைச்சலை கொண்டாடும் விழா என்று அனைவரும் அறிந்ததே.
ஆனால் இந்த விவசாய விரிவாக்கத்திற்க்கு பின் இருக்கும் வரலாற்றை (இந்திய துணை கண்டத்தில் நிகழ்ந்த நிலவுடைமை வணிக அரசியல்) அறிந்தால் வரலாற்று மீதான உங்கள் கண்ணோட்டம் மாருபடும் என நினைக்கிறேன்.
விவசாயம் என்பது நீர்நிலை ஆதாரம்அமைந்த மருதநிலத்தில் செய்யப்படும் ஒன்று, ஆற்றுபடுக்கைகளை ஒட்டி இயற்க்கையாக அமைந்த குறிஞ்சி, முல்லை காடுகளை அழித்து நீர் நிலைகளை ஒழுங்குபடுத்தி செயற்கக்கையாக உருவாக்கப்பட்ட ஒரு கட்டமைப்புதான் மருத நிலம். இவைகளே நாகரிகம் என்று அழைக்கப்படுகிறது.
உலகில் உள்ள பல நாகரிகம் நதிக்கரைகளை ஒட்டி எழுச்சிபெற்றவையே.
உலகில் உள்ள பல நாகரிகம் நதிக்கரைகளை ஒட்டி எழுச்சிபெற்றவையே.
இந்த நிகழ்வை சங்க இலக்கியமான "பட்டினப்பாலை" சிறப்பாக விவரித்திருக்கும்..
காடுகொன்று நாடாக்கிக்
குளந்தொட்டு வளம்பெருக்கிக்
பிறங்குநிலை மாடத் துறந்தை போக்கிக் கோயிலொடு குடிநிறீஇ
வாயிலொடு புழையமைத்து
ஞாயிறொறும் புதைநிறீஇ
பொருவேமெனப் பெயர்கொடுத்து
விளக்கம்:
காடுகளை அழித்து விளைநிலங்களாக மாற்றி மழைநீர் தேங்கும் குளங்கள் அமைத்து, புதிய கோட்டை, கோயில்கள் கட்டி அதில் அலுவலரைக் குடியேற்றினான். வாயில், பதுங்கும் புழையறை, மதில் மேலிருந்து அம்பு எய்யும் ஞாயில், அதன் அருகில் படைக்கலப் புதையல் வைக்கும் புதையிடம் போன்ற அமைப்புகளைக் கோட்டையில் நிறுவினான்.
இந்த பாடலில் விவசாய விரிவாக்கம் மட்டுமல்ல கரிகாலசோழன் ஆட்சியில் உலக நாடுகளுடன் நிகழ்ந்த கடல்வணிகம் பற்றியும், பாடப்பட்டிருக்கும்.
பட்டினப்பாலை என்பது சங்க இலக்கியங்கள் புகார், பூம்புகார், பட்டினம்,காவிரிப்பூம்பட்டினம் எனப் பல பெயர்களில் சுட்டும் இத்துறைமுக நகரம் காவிரி ஆறு வங்கக் கடலில் புகுகின்ற இடத்தில் அமைந்ததால் இப்பெயர்களைப் பெற்றது எனலாம். இந்திய துணை கண்டத்தை பொருத்தவரை விவசாய வரிவாக்கம் என்பது வைதீக எழுச்சியான கி.பி 8, 9 ஆம் நூற்றாண்டுகளில் தொடங்கி 20 ஆம் நூற்றாண்டு மத்திய பகுதி வரை நீண்டது. இக்காலத்தில் தான் நிலவுடைமை ஆதிக்கமும், முதலாலித்துவமும் தோன்றியது.
பார்ப்பனியம் இந்தியாவின் விசேடமான நிலவுடமைச் சமூக அமைப்பு முறை. மற்ற நாடுகளில் உள்ள நிலவுடமைச் சமூக அமைப்புகளோடு இதற்கு பல பொதுத்தன்மைகள் இருந்தாலும் சாதி என்ற தனித்தன்மை இந்தியாவில் மட்டுமே உண்டு. எனினும் இந்த தனித்தன்மை என்பது நிலவுடமை பொருளாதார அமைப்பு என்ற அடிப்படையிலேயே செயல்படுகிறது. வெறும் கருத்து, சிந்தனை சார்ந்த அமைப்பல்ல.
கோயில்கள் முதலில் பல்லவ ஆட்சியல் கட்டப்பட்டாளும் பெருமளவில் கோயில்கள் சோழர் காலங்களில் கட்டப்பட்டு இறைவன் பெயரால் மேலும் மேலும் நிலங்களையும், அடிமைகளையும் சேர்த்து கோயில்கள் பெரும் நிலவுடமை நிருவனங்கலாக்கப்பட்டது. கோயில்களின் சுரண்டல்களை பூர்வக்குடிகள் எதிர்த்ததை செப்பேடு, கல்லட்டு மற்றும் இலக்கியங்களிளும் காணமுடிகிறது. மற்றும் நாகரிக நகரங்கள் பழங்குடிகளால் உருவாக்கபட்டவையல்ல என்பதும் உணரமுடிகிறது.. இந்த நிலங்களின் விளைச்சல் நிலவுடமையாலர்களுக்கும் வணிகர்களுக்குமே கொண்டாட்டமாக இருந்திருக்குமே ஒழிய பழங்குடிகளுக்கு அல்ல..
தொடரும்....
No comments:
Post a Comment