Breaking

Thursday, November 2, 2017

கல்லறை திருநாள் | தமிழர்களின் மூத்தோர் வழிபாடு

கல்லறை பண்டிகைக்கும் பண்டைய தமிழர்களின் மூத்தோர் வழிபாட்டு முறைக்கும் உள்ள  ஒற்றுமை  காண்போம்!


கல்லறை திருநாள் என்பது இறந்த அனைவரது ஆன்மாக்களின் நாள் (முன்னேர்கள், புனிதர்கள், தியாகிகள் ) அனைவருக்கும் மறியாதை செலுத்தி நினைவு கூறும் நிகழ்வாகும், இதனை கத்தோலிக்க திருச்சபை உட்பட பல கிறித்தவ சபைகளாள் இவ்விழா நவம்பர் இரண்டாம் நாள் கொண்டாடுவதற்க்காக உருவாக்கபட்டது.

இந்நிகழ்வு உருவாவதற்க்கு ஹாலோவின் (halloween) முக்கிய காரணமாகும், இது ஜரோப்பாவை சார்ந்த செல்ட்டியர் (Celts) பழங்குடியினர்கள் தங்கள் இறந்த முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வாக இருந்தது.


இதை ஆகஸ்ட் மற்றும் நவம்பர்களில் பெர்சியர், பெருநாட்டவர், வட ஐரோப்பியர், ரோமர்களும் கொண்டாடி வந்துள்ளனர்.

மேலும் தெற்கு அமரிக்காவை சார்ந்த செவ்விந்தியர்களின் ஒரு பிரிவான இன்காக்களும் தங்கள் புத்தாண்டை நீத்தார் (இறந்த முன்னோர்) வழிபாடாக நடத்தி வந்துள்ளனர்.

உலகில் உள்ள குருபிட்ட பழங்குடியின மக்களிடமும் மூத்தோர் வழிபாட்டு முறை இருந்துள்ளது "இவைகள் பெரும்பாளும் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர்களில் கொண்டாடபட்டுகிறது" இது எதர்ச்சையான நிகழ்வாக இருக்க வாய்ப்பில்லை!!

இதற்க்கும் தமிழர் வழிபாட்டு முறைக்கும் என்ன தொடர்பு என்றால்!!

மதங்கள் தோன்றுவதற்க்கு முன்பே பண்டைய தமிழர்களிடம் முன்னோர் வழிபாடு மற்றும் இயற்க்கை (தினை) வழிபாடு மட்டுமே இருந்துள்ளது என்பதற்கு சங்க இலக்கியங்களிலும் தொல்பொருள் அகழாய்வுகளிளும் ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளது (இந்கு வழிபாடு என்பது வணங்குதளுக்குறியது).

மேலும் தமிழர்களிடம் இறந்தவர்களை எரிப்பதை விட புதைக்கும் பழக்கம் இருந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது இதற்க்கு சான்றாக தொல்லியல் ஆய்வில்  கி.மு 3000 முதல் கி.மு 1000 வரையிலான காலத்தை சார்ந்த "முதுமக்கள் தாழி" - கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

முதுமக்கள் தாழி

 பண்டைய தமிழர்கள் இறந்தவர்களின் நினைவாக நடுக்கல், குத்துக்கள், கல்திட்டை,கல்பதுக்கை அமைப்பது வழக்கம் அதாவது நாம் இன்று கட்டும் கல்லறை போன்று... மேலும் அதில் இறந்தவர் உருவம் அல்லது நிகழ்வை பொறித்து வைப்பார்கள்.

குறிபிட்ட காலத்தில் முன்னோர்களின் கல்லறைக்கு சென்று பூமாலை சூட்டி ஆடு (அ) கோழி பலி கொடுத்து அவர்களுக்கு பிடித்த இறைச்சி உணவு, பண்டம் படைத்து வணங்கும் வழக்கம் இருந்தது.

"முன்னோர் வழிபாடு என்பது உருவமற்றதாக இருந்து பின்னர் உருவம் பெற்றது, இவையே பின் நாட்களில் குலதெய்வ வழிபாடாகவும் மாறியதாக கருதப்படுகிறது".

தமிழர்கள் வணங்கும் மூதாதையர் வழிபாட்டிற்க்கும் அத்வைத மதம் கொண்டுவந்த பித்ரு (மூதாதை) திதி, திவசம் போன்ற சடங்குகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.. அதாவது பண்டைய தமிழர்களிடம் இவ்வழக்கம் இருந்திருக்கவில்லை ஆனால் இன்று பெரும்பாலான தமிழர்கள் இதைதான் கடைபிடிக்கிறார்கள்.

ஐப்பசியில் (தீபாவளி பண்டிகையன்று) தமிழர்கள் தங்கள் இறந்த முன்னோர்களை நினைவு கூறும் நிகழ்வாக இருந்தது, இன்று தீபாவளி நாள் எதற்கு என்று தெறியாத அளவிற்க்கு நம்மிடையே குழப்பம் ஏற்பட காரணம் ஆரிய-பார்பன வருகையால் தான், தமிழர்களிடம் பண்பாட்டு ரீதியாகவும் மரபு பழக்கங்கலும் பெரும் மாற்றம் ஏற்பட்டு சீரழிந்து திரிந்துவிட்டது.

- தீயவன் டேவிட்

No comments:

Post a Comment